For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

எந்த போட்டியையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.. வெற்றிக்காக போராடுவோம்.. அதுக்கான ஆரம்பம்தான் இது!

கோவா : தொடர்ந்து தொடர் முழுவதும் போராடும் அணியாக இருப்போம் என்றும் அதற்கான ஆரம்பம்தான் மும்பை சிட்டி அணிக்கு எதிரான வெற்றி என்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியின் தலைமை கோச் தெரிவித்துள்ளார்.

தொடரின் எந்த போட்டியையும் விட்டுக் கொடுக்காமல் விளையாடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

நேற்றைய ஐஎஸ்எல்லின் இரண்டாவது போட்டியில் நார்த்ஈஸ்ட் அணி 1க்கு 0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியை வெற்றி கொண்டுள்ளது.

யாராவது இவ்ளோ ஜெயிச்சிட்டு இப்படி பண்ணுவாங்களா? தினேஷ் கார்த்திக்கை விளாசிய முன்னாள் வீரர்!யாராவது இவ்ளோ ஜெயிச்சிட்டு இப்படி பண்ணுவாங்களா? தினேஷ் கார்த்திக்கை விளாசிய முன்னாள் வீரர்!

நார்த்ஈஸ்ட் யுனைடெட் வெற்றி

நார்த்ஈஸ்ட் யுனைடெட் வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் 2020-21 கால்பந்தாட்ட தொடர் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் 3வது போட்டியில் கோவா எஃப்சி மற்றும் பெங்களூரு எஃப் சி அணிகள் மோதவுள்ளன. நேற்றைய இரண்டாவது ஐஎஸ்எல் போட்டியில் மும்பை சிட்டி மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

தலைமை கோச் மகிழ்ச்சி

தலைமை கோச் மகிழ்ச்சி

கோவாவின் திலக் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான இந்த போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைனெட் அணி மும்பை சிட்டி அணியை 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டுள்ளது. இந்த வெற்றி குறித்து நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணயின் தலைமை கோச் ஜெரார்ட் நஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சரியான ஊக்கம்

சரியான ஊக்கம்

சிறப்பான மும்பை சிட்டி அணியிடம் இருந்து நாம் என்ன எதிர்பார்கக்லாம் என்ற திட்டமிடலுடன் போட்டியை எதிர்கொண்டோம். அந்த திட்டத்துடன் போட்டியை மிகவும் சிறப்பாக நமது வீரர்கள் விளையாடினர். விளையாட வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் கூட வெளியிலிருந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாட ஊக்கம் அளித்தனர் என்றார் அவர்.

தொடர் பலப்படுத்துதல்

தொடர் பலப்படுத்துதல்

ஐஎஸ்எல் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் பேசிய அவர், இந்த தொடர் நார்த்ஈஸ்ட் அணிக்கு மிகவும் சிறப்பாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து தங்களை பலப்படுத்திக் கொள்வோம் என்றும் கூறினார். முதல் நாளில் இருந்தே வெற்றிக்காக போராட உள்ளதாகவும் ஒருபோதும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் போட்டியை அணுக மாட்டோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

Story first published: Sunday, November 22, 2020, 19:17 [IST]
Other articles published on Nov 22, 2020
English summary
we will never give up and that's what we saw today -Gerard Nus
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X