For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

"அர்ஜென்டினா ஜெர்சியுடன் சில மாதங்கள்" உலகக்கோப்பையை வென்ற மெஸ்ஸி கூறிய வார்த்தை.. என்ன தெரியுமா?

தோஹா: இன்னும் சில தொடர்களில் சாம்பியன் பட்டத்தோடு அர்ஜென்டினா ஜெர்சி அணிந்து விளையாட வேண்டும் என்று உலகக்கோப்பையை வென்ற ஜாம்பவான் வீரர் லயோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

நொடிக்கு நொடி பரபரப்பு.. நிமிடத்திற்கு நிமிடம் எதிர்பார்ப்பு என்று சொல்லும் வகையில் முடிவுக்கு வந்துள்ளது ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர். இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது அர்ஜெண்டினா.

18 வருட கனவை எட்டிபிடித்துள்ள கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் வீரராக மாறியுள்ளார் லயோனல் மெஸ்ஸி. 35 வயதிலும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் முன் நின்று செய்த மேஜிக், ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

பாட்டியுடன் தொடங்கிய பயணம்.. மெஸ்ஸி மெஜிஷியானாக மாறியது எப்படி? வானை நோக்கி கைகளை உயர்த்துவது ஏன்? பாட்டியுடன் தொடங்கிய பயணம்.. மெஸ்ஸி மெஜிஷியானாக மாறியது எப்படி? வானை நோக்கி கைகளை உயர்த்துவது ஏன்?

மெஸ்ஸியின் முத்தம்

மெஸ்ஸியின் முத்தம்

உலகக்கோப்பையை வென்ற நொடியில் வந்த ஆனந்த கண்ணீர், தொடர் நாயன் விருதை வென்றபோது, உலகக்கோப்பைக்கு கொடுத்த முத்தம், உலகக்கோப்பையை பெற்றதும் குழந்தையை கொஞ்சிய முகம், சக வீரர்களுடனான கொண்டாட்டம் என்று லயோனல் மெஸ்ஸி நினைவுகள் அவ்வளவு மறக்க போவதில்லை.

லயோனல் மெஸ்ஸி பேட்டி

லயோனல் மெஸ்ஸி பேட்டி

அதுமட்டுமல்லாமல், இதுபோல் ஒரு உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காட்டுவோருக்கு "லைப்டைம் செட்டில்மெண்ட்" என்று தாராளமாக கூறும் அளவிற்கு ஒரு ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இன்னும் சில நாட்களுக்கு மக்கள் அனைவருக்கும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியும், லயோனல் மெஸ்ஸியும் பொழுதுபோக்கு. ஆனால் லயோனல் மெஸ்ஸி, உடனடியாக உலகக்கோப்பையை அர்ஜென்டினாவுக்கு கொண்டு சென்று மக்களுடன் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மெஸ்ஸியின் உள்ளுணர்வு

மெஸ்ஸியின் உள்ளுணர்வு

உலகக்கோப்பையை வென்ற மூன்றாவது அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், இந்த ஒரு தருணத்திற்காக வாழ்நாள் முழுக்க ஏங்கி இருக்கிறேன். ஆனால் கடவுள் ஒருநாள் உலகக்கோப்பை என்னும் பரிசை எனக்கு வழங்குவார் என்று தெரியும். இந்த உலகக்கோப்பைத் தொடர் தொடங்கும் போது, இது எனது தொடர் என்ற உணர்வு எனக்குள் இருந்தது. இந்த கோப்பை என் கையில் ஏந்த கொஞ்சம் அதிக காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று.

உடனடி ஓய்வு?

உடனடி ஓய்வு?

உலகக்கோப்பையை வெல்வதற்காக ஏராளமான கஷ்டங்களை சந்தித்தோம். ஆனால் அனைத்து கஷ்டங்களையும் கடந்து வெற்றிபெற்றுள்ளோம். அர்ஜென்டினா சென்று மக்களுடன் கொண்டாட வேண்டும். உடனடியாக தேசிய அணியில் இருந்து ஓய்வை அறிவிக்க போவதில்லை. சாம்பியன் பட்டத்துடன் மீண்டும் அர்ஜென்டினா ஜெர்சி அணிந்து சில தொடர்கள் விளையாட வேண்டும் என்று தெரிவித்தார்.

Story first published: Monday, December 19, 2022, 7:04 [IST]
Other articles published on Dec 19, 2022
English summary
Lionel Messi, the legendary player who won the World Cup, has said that he wanna wear the Argentina jersey and play with the title of champion in a few more series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X