For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

அடேங்கப்பா.. சவுதி அரேபிய வீரர்கள் காட்டில் அடைமழை.. பரிசின் விலையை கேட்டால் ஆடி போயிருவீங்க!

ரியாத்: உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணியை வீழ்த்திய சவுதி அரேபியா கால்பந்து வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டின் மன்னன் முகமது பின் சல்மான் அல் சௌத் அறிவித்துள்

ரியாத்: உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணியை வீழ்த்திய சவுதி அரேபியா கால்பந்து வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டின் மன்னன் முகமது பின் சல்மான் அல் சௌத் அறிவித்துள்ளார்.

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் கத்தாரில் கடந்த 20ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த உலகக்கோப்பையில் ஆசிய அணிகளின் எழுச்சி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, ரோனால்டோ ஆகியோருக்கு கடைசி உலகக்கோப்பை தொடர் என்பதால், அர்ஜென்டினா மற்றும் போர்ச்சுகல் அணிகளின் செயல்பாடுகள் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனம் இருந்தது.

சவுதி அரேபியா வெற்றி

சவுதி அரேபியா வெற்றி

அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பையை வெல்லும் அணி என்று அர்ஜென்டினா அணி ரசிகர்களிடையே கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில் குரூபி சுற்றில் சவுதி அரேபியா அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி விளையாடியது. இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி சார்பில் பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி மட்டுமே ஒரு கோல் அடித்தார். ஆனால் இரண்டாம் பாதியில் சவுதி அரேபியா அணியின் 5 நிமிட இடைவெளியில் இரண்டு கோல் அடித்து பலருக்கும் ஆச்சரியம் கொடுத்தது.

ரசிகர்கள் ஆச்சரியம்

ரசிகர்கள் ஆச்சரியம்

வலிமை வாய்ந்த அர்ஜென்டினா உலகக்கோப்பைத் தொடரில் ஆடிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் ஆசிய அணிகளில் ஒன்றான சவுதி அரேபியா, அர்ஜென்டினாவை வீழ்த்தியது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அரசு விடுமுறை

அரசு விடுமுறை

சவுதி அரேபியா அணியின் வெற்றியை சவுதி அரேபியா நாட்டின் ரசிகர்கள் தீவிரமாக கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சவுதி அரேபியா அணியின் வெற்றியை கொண்டாடுவதற்காக அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரசிகர்களின் கொண்டாட்டம் மேலும் அதிகமாகியது.

கார் பரிசு

கார் பரிசு

இந்த நிலையில் அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா அணியின் ஒவ்வொரு வீரருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் ஃபாண்டோம் சொகுசு கார் பரிசளிக்கப்படும் என்று சவுதி அரேபியா மன்னர் முகமது பின் சல்மான் அல் சௌத் அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் கார்

ரோல்ஸ் ராய்ஸ் கார்

ரோல்ஸ் ராய்ஸ் ஃபாண்டோம் சொகுசு கார் விலை ரூ.8.99 கோடி முதல் ரூ.10.48 கோடி ஆகும். பணக்காரர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மட்டுமே வாங்க வல்ல சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் காரை தங்கள் நாட்டு கால்பந்து வீரர்களுக்கு பரிசளிப்பதாக சவுதி aரேபியா மன்னர் முகமது பின் சல்மான் அல் சௌத் அறிவித்துள்ளார்.

Story first published: Friday, November 25, 2022, 23:14 [IST]
Other articles published on Nov 25, 2022
English summary
Saudi Arabia's King Mohammed bin Salman Al Saud has announced that each of the Saudi Arabia football players who beat Argentina in the World Cup will be given a Rolls Royce car.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X