For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

'"அதிர்ச்சி காத்திருக்கிறது" நட்சத்திர அணிகளை வரவேற்கும் ஸ்பெயின் பயிற்சியாளர்.. என்ரிக்கே சவால்!

தோஹா: உலகக்கோப்பை கால்பந்து தொடரை ஸ்பெயின் அணி வெல்லவில்லை என்றால், மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணிக்கே தனது ஆதரவு என பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக்கே தெரிவித்துள்ளார். அதேபோல் குரூப் ஈ பிரிவில் ஸ்பெயின் அணி அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் என்று என்ரிக்கே தெரிவித்துள்ளார்.

2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பையை வென்றதன் மூலம், ஐரோப்பாவுக்கு வெளியே கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற சாதனையை ஸ்பெயின் அணி படைத்தது.

அதனைத் தவிர்த்து 2018ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில், ரவுண்டு ஆஃப் 16 சுற்றில், பெனால்டி ஷூட் அவுட்டில் ரஷ்ய அணியிடம் தோற்று வெளியேறியதை அவ்வளவு சீக்கிரம் எந்த கால்பந்து ரசிகர்களும் மறந்திருக்க மாட்டார்கள்.

ஸ்பெயின் அணி

ஸ்பெயின் அணி

தொடர்ந்து நடப்பு ஆண்டுக்கான உலகக்கோப்பைத் தொடரில் ஸ்பெயின் அணியை இளமையும், அனுபவமும் கொண்ட அணியாக தேர்வு செய்துள்ளார் பயிற்சியாளர் லூயிஸ் என்ரீக்கே. ஸ்பெயின் அணி, எப்போதும் நடுக்கள வீரர்களை மையமாக வைத்தே ஆட்ட நுணுக்கங்களையும், யுக்தியையும் அரங்கேற்றம் செய்யும். அதற்கேற்ப செர்ஜியோ, கோகே, ரூயிஸ், பெட்ரி என அட்டகாசமான வீரர்களை ஸ்பெயின் அணி கொண்டுள்ளது.

 பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக்கே

பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக்கே

இந்த நிலையில் ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக்கே செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், 2014 முதல் 2017 வரை மெஸ்ஸி, சுவாரஸ் உள்ளிட்ட வீரர்களுக்கு பயிற்சியாளர்களாக செயல்பட்டுள்ளேன். அவர்களை போன்ற ஜாம்பவான் வீரர்கள் உலகக்கோப்பையை வெல்லாமல் ஓய்வு பெறுவது, அவர்களின் திறமைக்கு சான்றாக இருக்காது.

அர்ஜென்டினாவுக்கு ஆதரவு

அர்ஜென்டினாவுக்கு ஆதரவு

இந்த உலகக்கோப்பையை ஸ்பெயின் அணி வெல்லவில்லை என்றால், அர்ஜென்டினா அணி வெல்வதையே அதிகமாக விரும்புகிறேன். அதற்கு காரணம் மெஸ்ஸி மற்றும் சுவாரஸ் தான் என்று தெரிவித்துள்ளார்.தொடர்ந்து ஸ்பெயின் அணி பற்றி கேள்விக்கு, குரூப் ஈ பிரிவில் இடம்பெற்றுள்ள ஜெர்மனி, கோஸ்ட்டா ரிக்கா, ஜப்பான் என எந்த அணிகளும் சாதாரண அணிகள் அல்ல. ஆனால் அவர்களை கண்டு எங்களுக்கு பயமில்லை.

அதிர்ச்சி கொடுப்போம்

அதிர்ச்சி கொடுப்போம்

அதேபோல் எங்கள் அணியில் உள்ள இளைஞர்களை பற்றி கவலைப்படவில்லை. குரூப் பிரிவில் முதலிடம் பிடிப்பதே இலக்கு. ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் யாரை எதிர்க்க போகிறோம் என்பதையும் கணக்கிட்டே செயல்பட்டு வருகிறோம். அனைத்து அணிகளுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுப்போம் என்று தெரிவித்தார்.

Story first published: Saturday, November 19, 2022, 10:31 [IST]
Other articles published on Nov 19, 2022
English summary
Coach Luis Enrique has said that if Spain does not win the World Cup, he will support Messi's Argentina team. Likewise, Enrique said that the Spanish team will shock everyone in Group E.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X