For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

18 வயசு தான்.. பீலே-வுக்கு பின் ஸ்பெயின் அணி வீரர் படைத்த சாதனை.. குவியும் ரசிகர்களின் வாழ்த்து!

தோஹா: பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு பின் உலகக்கோப்பைத் தொடரில் மிக இளம் வயதில் கோல் அடித்தவர் என்ற சாதனையை ஸ்பெயின் அணியின் காவி படைத்துள்ளார்.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடக்கம் முதலே சூடுபிடித்துள்ளது. ஆசிய அணிகளான சவுதி அரேபியா, ஜப்பான் அணிகள் முன்னாள் கால்பந்து சாம்பியன்களான அர்ஜென்டினா, ஜெர்மனி உள்ளிட்ட அணிகளை வீழ்த்தியுள்ளது.

இதனால் உலகம் முழுவதுமே கால்பந்து ரசிகர்களிடையே அதிக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் சைலண்ட்டாக பல்வேறு சாதனைகளும் படைக்கப்பட்டு வருகிறது.

ஃபிஃபா உலககோப்பை 2022 - ஈரான் கோல் கீப்பரின் மூக்கு உடைந்தது.. சொந்த அணி வீரரே தாக்கிய அதிர்ச்சிஃபிஃபா உலககோப்பை 2022 - ஈரான் கோல் கீப்பரின் மூக்கு உடைந்தது.. சொந்த அணி வீரரே தாக்கிய அதிர்ச்சி

ஸ்பெயின் வெற்றி

ஸ்பெயின் வெற்றி

நேற்று முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் - கோஸ்ட்டா ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. இறுதியாக ஸ்பெயின் அணி 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது. இதில் ஸ்பெயின் அணியின் பல்வேறு வீரர்கள் கோல் அடித்து அசத்தினார்.

 காவி சாதனை

காவி சாதனை

குறிப்பாக 18 வயதே நிரம்பிய ஸ்பெயின் அணியின் இளம் வீரர் காவி 5வது கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு பின் மிக இளைய வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதேபோல் ஸ்பெயின் அணிக்காக மிக இளைய வயதில் கோல் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

பீலேவின் ராஜ்ஜியம்

பீலேவின் ராஜ்ஜியம்

பிரேசில் ஜாம்பவான் பீலே, 1958 உலகக்கோப்பையில் ஆடிய போது 17 வயதில் கோல் அடித்ததே இதுவரை சாதனையாக உள்ளது. இந்த நிலையில் கோஸ்ட்டா ரிக்கா அணிக்கு எதிராக கோல் அடித்தது பற்றி ஸ்பெயின் அணியின் காவி கூறுகையில், ஜாம்பவான் பீலே-வுக்கு பின் மிக இளவயதில் கோல் அடித்த வீரர் என்பது மிகப்பெரிய கவுரவம்.

 காவி கருத்து

காவி கருத்து

ஸ்பெயின் அணிக்காக களமிறங்கி கோல் அடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சியை கொடுக்கிறது. சிறந்த ஆட்டமாக அமைந்தது. ஆனால் எங்கள் பணி இன்னும் முடியவில்லை என்று தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் ஸ்பெயின் அணி 100 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, November 24, 2022, 19:57 [IST]
Other articles published on Nov 24, 2022
English summary
After Brazilian legend Pele, Spain's Gavi has set the record of becoming the youngest goalscorer in the World Cup series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X