For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

யூரோ கோப்பை கால்பந்து: போலந்து அணியை உள்ளூரில் சாய்த்து காலிறுதிக்குப் போனது செக் குடியரசு

By Mathi
Czech Republic
ரோகிளவ்: 14-வது யூரோ கோப்பை கால்பந்து தொடரில் வலுவான போலந்து அணியை உள்ளூர் மைதானத்தில் வீழ்த்திய செக் குடியரசு அணியானது கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான யூரோ கால்பந்து கால் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் இந்தப் போட்டியை நடத்துகின்றன. ஒவ்வொரு போட்டியிலும் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

ஏ பிரிவு போட்டியில் செக் குடியரசும் போலந்தும் மோதின. முதல் போட்டியில் ரஷ்யாவிடம் 4 கோல்களை வாங்கியிருந்த செக் குடியரசு சோபிக்காது என்றே கருதப்பட்டது. புள்ளிப்பட்டியலிலும் கூட 27-வது இடத்தில் இருக்கிறதே செக் குடியரசு என்றுதான் கருதப்பட்டது.

அனைத்துவித எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கிவிட்டது செக் குடியரசு அணி. இரண்டு அணிகளுக்கும் இடையேயான போட்டியின் முதல் பாதியில் எந்த அணி கோலடிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் இரண்டு அணிகளுமே கோலடிக்கவில்லை.

இதனால் 2-வது பாதி ஆட்டம் கூடுதல் விறுவிறுப்பானது. ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில்செக் குடியரசு அணி கோலடிக்க ஆட்டம் இன்னும் சூடுபிடித்தது. செக் குடியரசு அணிக்கு எதிராக போலந்து அணியால் கடைசிவரை கோலடிக்க முடியவில்லை.

எந்த செக் குடியரசு அணி தேறாது- வெளியேறிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டதோ அந்த அணி போலந்தை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

Story first published: Sunday, June 17, 2012, 10:03 [IST]
Other articles published on Jun 17, 2012
English summary
The Czech Republic stunned hosts Poland 1-0 here Saturday, roaring into the Euro 2012 quarterfinals as the Group A winners.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X