களத்தில் 5 தமிழக வீராங்கனைகள்..!! 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கால்பந்து கோப்பையில் இந்திய மகளிர் அணி

மும்பை: மகளிருக்கான ஆசிய கால்பந்து கோப்பை தொடர் மும்பையில் நடைபெறுகிறது. இதில் 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் அணி களமிறங்குகிறது.

இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஜப்பான், சீனா, இந்தியா, ஈரான்,ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா உள்ளிட்ட 12 அணிகள் , 3 பிரிவுகளாக பங்கேற்கிறது

இந்தியா போட்டியை நடத்துவதால் நேடியாக இந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் காலிறுதி வரை இந்தியா தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

“6 விக்கெட்கள்.. 5 டக் அவுட்கள்” டி20ல் ரஷிக் கான் ஆடிய ருத்ர தாண்டவம்.. ஐபிஎல்-ல் எகிறிய மவுசு!! “6 விக்கெட்கள்.. 5 டக் அவுட்கள்” டி20ல் ரஷிக் கான் ஆடிய ருத்ர தாண்டவம்.. ஐபிஎல்-ல் எகிறிய மவுசு!!

குரூப் பிரிவுகள்

குரூப் பிரிவுகள்

குரூப் ஏ வில் இந்தியா, சீனா, சீனா தைபே மற்றும் ஈரான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி காலிறுதிக்கு முன்னேறும். ஒவ்வொரு பிரிவிலும் 3வது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தனியாக போட்டி நடத்தப்பட்டு, அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணியும் காலிறுதிக்கு செல்லும்.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

இந்த தொடரில் முதல் 5 இடங்களை பிடிக்கும் அணி உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டிக்கு தகுதி பெறும் . முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், ஈரான் மகளிர் அணிகளும் மோத உள்ளன. இந்திய மகளிர் அணி கால்பந்து தரவரிசை பட்டியலில் 55வது இடத்தில் உள்ளது. ஈரான் அணி 70வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் இதுவரை 3 முறை மோதியுள்ளன. இதில் இந்திய அணி 2 முறையும், ஈரான் ஒரு முறையும் வென்றுள்ளது.

தமிழக வீராங்கனைகள்

தமிழக வீராங்கனைகள்

இந்திய மகளிர் அணியில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த தொடரில் தமிழகத்தை சேர்ந்த இந்துமதி கதிரேசன், சந்தியா ரங்கநாதன், மாரியம்மாள் பாலமுருகன், சௌமியா நாராயணசாமி மற்றும் கார்த்திகா அங்கமுத்து ஆகிய 5 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்

நம்பிக்கை

நம்பிக்கை

அதிகபட்சமாக 8 மணிப்பூர் வீராங்கனைகள், 5 தமிழக வீராங்கனைகள், 3 ஹரியானா வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். ஈரான் அணி தகுதி சுற்றில் ஜார்டன், வங்கதேசம்.,அணியை வீழ்த்தி நல்ல உத்வேகத்துடன் உள்ளது. இந்திய மகளிர் அணி, அண்மையில் பிரேசில் அணியை எதிர்கொண்ட உத்வேகத்துடனும், அனுபவத்துடனும் உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என்று கேப்டன் அசதலத்தா தேவி தெரிவித்துள்ளார். இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை ஜியோ டிவியில் காணலாம்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Women Asia football cup 2022 India face Iran today களத்தில் 5 தமிழக வீராங்கனைகள்..!! 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கால்பந்து கோப்பையில் இந்திய மகளிர் அணி
Story first published: Thursday, January 20, 2022, 16:55 [IST]
Other articles published on Jan 20, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X