இந்திய ஹாக்கி அணிக்கு அரசு ஒரு ஆண்டுக்கு எவ்வளவு செலவு செய்யுது தெரியுமா??

டெல்லி: கிரிக்கெட்டுக்கு முன்பு ஹாக்கியில் தான் இந்தியா கில்லி, ஒரு காலத்தில் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சென்றால், ஹாக்கியில் தங்கம் வெல்லாமல் திரும்பாது..

பிறகு கிரிக்கெட் பிரபலமானதை தொடர்ந்து, ஹாக்கியின் மீது ரசிகர்களின் கவனம் குறைய தொடங்கியது.

ஹாக்கி அணிக்கு மத்திய அரசுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வந்தது.

இஷானுக்கு பதிலாக ஏன் சூர்யகுமார்? 3 மிக முக்கிய காரணங்கள்.. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு! இஷானுக்கு பதிலாக ஏன் சூர்யகுமார்? 3 மிக முக்கிய காரணங்கள்.. கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு!

பதக்கம்

பதக்கம்

கிரிக்கெட்டுக்கு ஸ்பான்சர் வழங்க பல நிறுவனம் போட்டி போட இந்திய ஹாக்கி அணிக்கு ஓடிசா அரசு தான் ஸ்பான்சர்ஷிப் வழங்கியது. தற்போது ஹாக்கி மீதும் ரசிகர்கள் கவனம் செலுத்தி வர தொடங்கியுள்ளனர். டோக்யோ ஒலிம்பிக்கில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது ஹாக்கி போட்டிக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

செலவு

செலவு

இந்த நிலையில், இந்திய ஹாக்கி அணிக்கு மத்திய அரசின் விளையாட்டு துறை அமைச்சகம் சார்பாக எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்று எம்.பி.ஒருவரின் கேள்விக்கு அமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்து பூர்வமாக பதில் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கடந்த 5 ஆண்டுகளில் 65 கோடி ரூபாய் இந்திய ஹாக்கி அணிக்காக அரசு செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

விளக்கம்

விளக்கம்

இதில், சீனியர் வீரர்களுக்கு 45 கோடி ரூபாயும், ஜூனியர் வீரர்களுக்கு20 கோடி ரூபாயும் வழங்கப்பட்டதாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்த தொகை, ஹாக்கி அணி வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போதும், பயிற்சி முகாமில் பங்கேற்கும் போதும், வெளிநாட்டு பயிற்சியாளருக்கு ஊதியமாகவும் செலவு செய்யப்படுவதாக அனுராக் தாக்கூர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

குறைவு

குறைவு

மேலும் ஹாக்கியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த தனியாக 103 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சாதாரண ஒரு ஐ.பி.எல். அணிக்கு ஒரு மாதமே கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு மாதத்திற்கே இதைவிட பல மடங்கு பணம் செலவிடப்படும் நிலையில், ஹாக்கி அணிக்கு 5 ஆண்டுக்கே 65 கோடி ரூபாய் என்பது மிகவும் குறைவாக பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Union Sports Minister Reveals the amount Spending For Hockey Team.Anuraj Thakur told to Rajyasabha. Govt Spent 65 Crores for 5 Years
Story first published: Thursday, December 2, 2021, 19:30 [IST]
Other articles published on Dec 2, 2021

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X