டாப்-10க்குள் நுழைந்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

Posted By: Staff

டெல்லி: தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு தற்போது நல்ல காலம் பிறந்துள்ளது. ஒரே நேரத்தில் ஆடவர் மற்றும் மகளிர் அணி ஆசியக் கோப்பை வென்றதுடன், அடுத்த ஆண்டு நடக்கும் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. தற்போது, மகளிர் அணி உலகத் தரவரிசையில் முன்னேறியுள்ளது

சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை ஹாக்கியில் ஆடவர் பிரிவிலும், மகளிர் பிரிவிலும் கோப்பையை வென்று இந்திய ஹாக்கி அணிகள் அசத்தின. கடந்த, 2004ல் சென்னையில் கோப்பையை வென்ற பிறகு, இரண்டாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்று மகளிர் அணி அசத்தியது.

India in Top 10

ஆசியக் கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்திலும் தோல்வியடையாத இந்திய அணி, 28 கோல்களை அடித்தது, அதே நேரத்தில் 5 கோல்களை மட்டுமே விட்டுக் கொடுத்தது.

இந்த அசாத்திய சாதனையுடன், உலகத் தரவரிசையில் 12வது இடத்தில் இருந்து 10வது இடத்துக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியுள்ளது. இந்திய ஆடவர் அணி, தொடர்ந்து 6வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் ஆசியக் கோப்பையை வென்ற மகளிர் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, ஹாக்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Story first published: Tuesday, November 7, 2017, 18:29 [IST]
Other articles published on Nov 7, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற