தொடங்கியது காமென்வெல்த் 2018 போட்டிகள்.. களமிறங்கிய இந்திய படை!

Posted By:

குயின்ஸ்லேண்ட்: ஆஸ்திரேலியாவில் காமென்வெல்த் 2018 போட்டிகள் தொடங்கி இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கு நிகராக பார்க்கப்படும் இந்த போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று தொடங்கும் இந்த போட்டிகள் ஏப்ரல் 15 வரை நடக்க இருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் நடக்கும் அதே சமயத்தில் இந்த போட்டிகளும் நடக்க உள்ளதால் விளையாட்டு ஆர்வலர்கள் சந்தோச மிகுதியில் இருக்கிறார்கள்.

இதற்காக இந்திய வீரர்கள் நீண்ட நாட்களாக பயிற்சி எடுத்துள்ளார்கள். இந்திய குழுவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

ஸ்டேடியம்

இந்த காமென்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் பகுதியில் இருக்கும் ''கர்ராரா'' மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக மிகவும் பிரமாண்டமாக ஸ்டேடியம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குயின்ஸ்லேண்ட் பகுதி சுற்றுலாவாசிகளின் சொர்க்கங்களில் ஒன்றாகும்.

கோலாகலம்

இதற்கான தொடக்க விழா மிகவும் கோலாகலமாக தொடங்கப்பட்டது. 4000 வீரர், வீராங்கனைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். இந்த விழா மிகவும் பிரமாண்டமாக கண்கவர் வண்ணங்களுடன் நடந்தது.

இந்தியா கலந்து கொள்கிறது

இந்தியா கலந்து கொள்கிறது

இந்தியாவில் இருந்து இந்த முறை 225 வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இதனால் இந்த முறை இந்தியாவிற்கு அதிக தங்கம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சிந்து, சாய்னா, மேரி கோம், நீரஜ் சோப்ரா போன்ற தலை சிறந்த வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

டிவிட்டர் பக்கம்

இந்தியா ஆஸ்திரியாவில் நடக்கும் காமென்வெல்த் போட்டியில் பதக்கம் வெல்லும் விவரங்களை வெளியிட டிவிட்டர் பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் இந்திய வீரர்கள் ஆஸ்திரேயாவிற்கு சென்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதில் தொடர்ச்சியாக காமென்வெல்த் குறித்த தகவல்கள் வெளியிடப்படும்.

English summary
2018 Commonwealth Games starts in Australia. Indian players participated in opening ceremony.
Story first published: Wednesday, April 4, 2018, 16:32 [IST]
Other articles published on Apr 4, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற