For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுவரை இல்லாத 'வீக்' பவுலர்களுடன் ஆஸி. வந்துள்ள பாக்... நமக்கு 'யூஸ்' ஆகுமா?

By Veera Kumar

சிட்னி: உலக கோப்பையில் மிகவும் பலவீனமான வேகப்பந்து வீச்சுடன் களமிறங்க உள்ளது பாகிஸ்தான். எப்போதுமே வேகப்பந்து வீச்சில் பலமான அணியாகவே அறியப்பட்டு வந்த பாகிஸ்தானுக்கு இந்த உலக கோப்பை அந்த வகையில் ஏமாற்றமே.

இம்ரான்கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயிப் அக்தர், முகமது சமி, உமர் குல், முகமது ஆசிப் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சிறப்பான வேகப்பந்து வீச்சாளரை உருவாக்கி வந்தது பாகிஸ்தான்.

பேட்டிங், ஃபீல்டிங் என்று எந்த பிரிவில் பாகிஸ்தான் சொதப்பினாலும், வேகப்பந்து அட்டாக்கில் மட்டும் பாகிஸ்தான் சோடை போனது கிடையாது.

பலவீனமான பயில்வான்

பலவீனமான பயில்வான்

ஆனால் இந்த உலக கோப்பையில் மிகவும் வீக்கான ஒரு வேகப்பந்து பட்டாளத்துடன் ஆஸ்திரேலியா பக்கம் வந்துள்ளது பாகிஸ்தான்.

பெயரே தெரியாத வீரர்கள்

பெயரே தெரியாத வீரர்கள்

அந்த அணியில் முகமது இர்பான், வகாப் ரியாஸ், ரகத் அலி, சொகைல் கான் மற்றும் ஈசான் அடில் ஆகியோர்தான் வேகப்பந்து துறையை வழிநடத்துவோராகும்.

மொத்த வித்தையும் 10 போட்டிக்குள்

மொத்த வித்தையும் 10 போட்டிக்குள்

ஆனால் இம்மூன்று பேரின் மொத்த அனுபவமே 10 ஒருநாள் போட்டிகளை தாண்டாது என்பதுதான் விந்தை.

காயமடைந்த ஜூனைத்

காயமடைந்த ஜூனைத்

ஜுனைட் கான் மட்டும் சற்று அனுபவசாலி வேகப்பந்து வீச்சாளராக பாகிஸ்தானில் நீடித்து வந்த நிலையில், அவர் காயமடைந்ததால் ரகத் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் இதுவரை விளையாடியது ஒரே ஒரு போட்டியில் மட்டுமேயாகும்.

ஜிம்பாப்வே பரவாயில்லை

ஜிம்பாப்வே பரவாயில்லை

ஜிம்பாப்வே, வங்கதேசம் போன்ற ஐசிசி பட்டியலில் கீழே உள்ள அணிகள் கூட இதைவிட அனுபவம்மிக்க வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துள்ளனர்.

ரன்னை அள்ளிக் கொடுக்கிறார்கள்

ரன்னை அள்ளிக் கொடுக்கிறார்கள்

போட்டிகளின் அனுபவத்தில் மட்டுமின்றி, விக்கெட் எடுப்பதிலும், ரன்னை விட்டுக்கொடுப்பதிலும் இப்போதுள்ள பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் வீக்தான்.

92ல் இம்ரான் தலைமையில்

92ல் இம்ரான் தலைமையில்

1992ம் ஆண்டு உலக கோப்பை: இம்ரான்கான், வாசிம் அக்ரம், அக்யுப் ஜாவித், வாசிம் கைதர்

96ல் அக்ரம் தலைமையில்

96ல் அக்ரம் தலைமையில்

1996: வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அக்யுப் ஜாவித், அடா-உர்-ரஹ்மான்

99லும் அட்டகாசமான பந்து வீச்சாளர்கள்

99லும் அட்டகாசமான பந்து வீச்சாளர்கள்

1999: வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயிப் அக்தர், அப்துல் ரசாக், அசார் முகமது

2003ல் கலக்கிய அதே கூட்டணி

2003ல் கலக்கிய அதே கூட்டணி

2003: வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயிப் அக்தர், அப்துல் ரசாக், அசார் முகமது, முகமது சமி

2007ல் கதி கலக்கிய உமர் குல் அன் கோ

2007ல் கதி கலக்கிய உமர் குல் அன் கோ

2007: உமர் குல், முகமது சமி, ரானா நவீத் உல் ஹசன், அசார் முகமது, யாசிர் அராபத், இஃப்டிகார் அன்ஜும்

2011ல் சோயப் அக்தர் தலைமையில்

2011ல் சோயப் அக்தர் தலைமையில்

2011: சோயிப் அக்தர், உமர் குல், சொகைல் தன்வீர், வாகப் ரியாஸ், அப்துல் ரசாக், ஜுனைட் கான்.

Story first published: Thursday, February 12, 2015, 8:29 [IST]
Other articles published on Feb 12, 2015
English summary
Junaid Khan's injury and his subsequent ouster from the World Cup was quite depressing for Pakistani fans.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X