For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்.. எவ்வளவு தங்கம் கிடைக்கும்.. இதோ நாங்க இருக்கோம்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்கு தங்கம் வென்று தரக் கூடிய வாய்ப்புள்ளவர் குறித்த தொகுப்பு

டெல்லி: இந்தோனேசியாவில் நாளை துவங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கம் வெல்லக் கூடியவர்களாக, துப்பாக்கிச் சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை வீரர்கள் உள்ளிட்டோர் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பங்க்கில் நடக்க துவங்குகிறது. செப்டம்பர் 2ம் தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 57 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் இந்தியா 8வது இடத்தைப் பிடித்தது. கடந்த நான்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா குறைந்தபட்சம் 10 தங்கத்தையாவது வென்றுள்ளது. இந்த முறை பதக்க எண்ணிக்கையை உயர்த்துவதற்கு நிறைய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் தங்கம் வெல்வார்கள் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுவது, துப்பாக்கிச் சுடுதல், குத்துச்சண்டை, மல்யுத்த வீரர்களையே.

துப்பாக்கிச் சுடுதல்

துப்பாக்கிச் சுடுதல்

துப்பாக்கிச் சுடுதலில், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார் 16 வயதாகும் மனு பாங்கர். மிகவும் குறைந்த வயதில் தங்கம் வென்றவர் என்ற அவருடைய சாதனையை அடுத்த சில நாட்களிலேயே முறியடித்தார் 15 வயதாகும் அனிஷ் பான்வாலா. இவர்களைத் தவிர 18 வயதாகும் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவானும் தங்கம் வெல்வார் என பெரியும் எதிர்பார்க்கப்படுகிறது.

மல்யுத்தம், குத்துச்சண்டை

மல்யுத்தத்தில் கடந்த முறை வெள்ளி வென்ற பஜ்ரங் புனியா மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. மகளிர் பிரிவில் வினேஷ் போகத் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கலாம். குத்துச்சண்டையில் ஏற்கெனவே இரண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற விகாஸ் கிருஷண், இந்த முறை தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

கபடி மற்றும் ஹாக்கி

கபடி மற்றும் ஹாக்கி

கபடியில் இதுவரை 9 முறை தங்கம் வென்றுள்ள இந்தியா, இந்த முறையும் அதைத் தொடரும் என்று உறுதியாக நம்பலாம். தங்கத்தைத் தவிர வேறு எதுவும் தற்போதுள்ள இந்திய ஹாக்கி அணியின் திறமைக்கு குறைவானதாகவே அமையும்.

ஈட்டி எறிதலில் நீரஜ்

ஈட்டி எறிதலில் நீரஜ்

துவக்க விழாவில் தேசியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ள 20 வயதாகும் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்தியாவுக்கு தங்கம் வென்று பெருமை சேர்ப்பார் என்று நம்பலாம்.

Story first published: Friday, August 17, 2018, 18:23 [IST]
Other articles published on Aug 17, 2018
English summary
India pinning hope on wresters and shooters to get more gold in the asian games.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X