ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமை.. 3வது முறையாக தட்டித்தூக்கிய ஆஸ்திரேலியா.. இந்தியாவுக்கு ஏமாற்றம்

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை 3வது முறையாக ஆஸ்திரேலியா நாடு பெற்றுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23-ம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளது.

அடிச்சிருவாரு போல.. மைதானத்தில் கடும் சண்டை.. கோபித்துக்கொண்டு சென்ற இலங்கை கோச்.. அணிக்குள் சலசலப்பஅடிச்சிருவாரு போல.. மைதானத்தில் கடும் சண்டை.. கோபித்துக்கொண்டு சென்ற இலங்கை கோச்.. அணிக்குள் சலசலப்ப

இதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில் பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்களும், வீராங்கனைகளும் ஜப்பான் வந்துள்ளனர்.

2032 ஒலிம்பிக் போட்டிகள்

2032 ஒலிம்பிக் போட்டிகள்

கொரோனா காரணமாக கடந்தாண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் இந்தாண்டு டோக்கியோவில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை எந்த நகரத்தில் நடத்துவது என்பது குறித்த ஆலோசனையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இன்று நடத்தியது. இதில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரம் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை பெற்றுள்ளது.

32 மைதானங்கள்

32 மைதானங்கள்

ஆஸ்திரேலிய அரசு இதற்காக 32 இடங்களை சர்வதேச ஒலிம்பிக் அமைப்புக்கு அனுப்பியுள்ளது. இதில் பிரபல சர்வதேச கிரிக்கெட் மைதானமான காப்பா ஸ்டேடியமும் ஒன்று. இந்த ஸ்டேடியம் ஒலிம்பிக்கிற்காக மாற்றி அமைக்கப்பட்டு, அங்கு தொடக்க நிகழ்ச்சி, முடிவுரை நிகழ்ச்சி, தடகள போட்டிகள் நடத்தப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் போட்டி

கடும் போட்டி

2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை பெற இந்தியா, இந்தோனேஷியா, கத்தார், ஜெர்மணி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் முணைப்பு காட்டியது. ஆனால் இறுதியில் அதனை ஆஸ்திரேலியா தட்டிச்சென்றது. ஆஸ்திரேலிய இதற்கு முன்னர் 2 முறை ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியுள்ளது. 1956ம் ஆண்டு மெல்பேர்ன் நகரத்திலும், 2000ம் ஆண்டு சிட்னியிலும் போட்டிகள் நடைபெற்றனர். தற்போது 3வது முறையாக பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.

2024ம் ஆண்டு ஒலிம்பிக்

2024ம் ஆண்டு ஒலிம்பிக்

2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோ நகரத்தில் நடைபெறவுள்ள நிலையில், 2024ம் ஆண்டு ஒலிம்பிக்கை பாரிஸ் நகரத்தில் நடைபெறவுள்ளது. அதே போல 2028ம் ஆண்டு போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியானது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IOC Announced Australias's Brisbane confirmed as the host of 2032 Olympic Games
Story first published: Wednesday, July 21, 2021, 15:33 [IST]
Other articles published on Jul 21, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X