For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 457 ரன்கள் குவித்த இந்தியா! அசத்தியது புவனேஷ்- ஷமி ஜோடி!!

By Mathi

நாட்டிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 457 ரன்கள் குவித்தது. கடைசி விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் எடுத்த புவனேஷ்வர்குமார், முகமது ஷமி ஆகியோர் அரைசதம் விளாசி அதிரடி காட்டினர்.

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் நாளில் 4 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்திருந்தது. தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜய் 122 ரன்களுடனும், கேப்டன் டோணி 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

2-வது நாள் ஆட்டத்தில் முரளிவிஜய் 146 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் ஆட ஜடேஜா நீண்ட நேரம் நிற்கவில்லை. அவர் 25 ரன்களில் அவுட் ஆனார்.

82 ரன்னில் டோணி அவுட்

82 ரன்னில் டோணி அவுட்

தொடர்ந்து கேப்டன் டோணி 82 ரன்களிலும் அறிமுக வீரர் ஸ்டூவர்ட் பின்னியும் 1 ரன் எடுத்த நிலையிலும் பெவிலியன் திரும்பினார்.

3 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகள்

3 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகள்

இஷாந்த் ஷர்மாவும் ஒரே ஒரு ரன் எடுத்து போன வேகத்தில் திரும்பினார். அதாவது இந்திய அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த சோகம் நடந்தது.

கை கோர்த்த புவனேஷ்- ஷமி ஜோடி

கை கோர்த்த புவனேஷ்- ஷமி ஜோடி

இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 346 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 10-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த புவனேஷ்வர்குமாரும், முகமது ஷமியும் விஸ்வரூபம் காட்டினர்.

38 ஓவரை எதிர்கொண்ட ஜோடி

38 ஓவரை எதிர்கொண்ட ஜோடி

இருவரும் நிலைத்து அதிரடியாக ஆடி அழகாக தங்களது முதலாவது அரைசதத்தையும் கடந்தனர். மொத்தம் 38 ஓவர்களை இந்த ஜோடி தாக்கு பிடித்தது.

457 ரன்கள்

457 ரன்கள்

புவனேஷ்வர்குமார் 58 ரன்களில் அவுட் ஆனார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 161 ஓவர்களில் 457 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. முகமது ஷமி 51 ரன்களுடன் களத்தில் நின்றார்.

ஆண்டர்சன் 3 விக்கெட்டுகள்

ஆண்டர்சன் 3 விக்கெட்டுகள்

இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பிராட், ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும், பிளங்கெட், மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

111 ரன்கள் குவித்த ஜோடி

111 ரன்கள் குவித்த ஜோடி

9-வது வரிசை பேட்ஸ்மேனான புவனேஷ்வர்குமாரும், 11-வது வரிசை வீரரான முகமது ஷமியும் இணைந்து 10-வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் குவித்தனர்.

2வது சாதனை

2வது சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசி விக்கெட்டுக்கு இந்திய ஜோடி சேர்ந்த 2-வது அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

2004-ல் டெண்டுல்கர்-ஜாகீர்கான் ஜோடி

2004-ல் டெண்டுல்கர்-ஜாகீர்கான் ஜோடி

2004-ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிராக டாக்காவில் நடந்த டெஸ்டில் கடைசி விக்கெட்டுக்கு சச்சின் டெண்டுல்கரும், ஜாகீர்கானும் 133 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்களாகும்.

Story first published: Friday, July 11, 2014, 13:18 [IST]
Other articles published on Jul 11, 2014
English summary
Last wicket pair of Bhuvneshwar Kumar and Mohammed Shami produced a stunning rearguard century partnership as India recovered from a dramatic middle-order collapse to post a commendable 457 in their first innings on the second day of the opening Test against England.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X