For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய அளவிலான கார் பந்தயத்தில் சென்னையை சேர்ந்த சாய் ப்ரித்வி.. தேடி வந்த வாய்ப்பு!

சென்னை : சென்னையை சேர்ந்த கார் பந்தய வீரரான சாய் ப்ரித்விக்கு ஜிடி வேர்ல்டு சேலஞ்ச் ஏசியா ஈஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

Recommended Video

CPL 2020: Match 5 | STZ vs BT | Rain stopped, Zouks beat Barbados

சில மாதங்கள் முன்பு அவர் ஈஸ்போர்ட்ஸ் கார் பந்தயங்களில் பெற்ற வெற்றியை அடுத்து இந்த வாய்ப்பு தேடி வந்துள்ளது.

எஸ்ஆர்ஓ மோட்டார்ஸ்போர்ட்ஸ் நடத்தும் ஜிடி வேர்ல்டு சேலஞ்ச் ஏசியா ஈஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் அவர் பங்கேற்க உள்ளார்.

Chennai’s Sai Prithvi to participate in GT World Challenge Asia Esports Championship

சாய் ப்ரித்வி உண்மையான கார் பந்தயங்களில் கலந்து கொண்ட வீரர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கார் பந்தயங்கள் நடத்துவதில் சிக்கல் இருப்பதில் பல கார் பந்தயங்கள் ஈஸ்போர்ட்ஸ் முறையில் நடத்தப்படுகின்றன.

உண்மையான கார் பந்தயங்களிலும் வெற்றிகள் பெற்றுள்ள சாய் ப்ரித்வி ஈஸ்போர்ட்ஸ் முறையிலும் வெற்றி பெற்று வருகிறார்.

இந்த நிலையில், ஜிடி வேர்ல்டு சேலஞ்ச் ஏசியா ஈஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அளவில் ஈஸ்போர்ட்ஸ் கார் பந்தயங்களை நடத்தி வந்த ஐஆர் ஸ்போர்ட்ஸ் சார்பாக, இந்தியா சார்பில் பங்கேற்கும் மூன்று கார் பந்தய டிரைவர்களில் சாய் ப்ரித்வியும் ஒருவர்.

கடந்த மே மாதம் நடைபெற்ற ஸிம் ரேஸிங் சாம்பியன்ஷிப் தொடரில் ஈஸ்போர்ட்ஸ் முறையில் கார் பந்தயத்தில் கலந்து கொண்ட சாய் ப்ரித்வி முதல் இடத்தை பெற்று இருந்தார்.

அதைத் தொடர்ந்து அவருக்கு ஜிடி வேர்ல்டு சேலஞ்ச் ஏசியா ஈஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தொடர் ஆறு கட்டமாக நடைபெற உள்ளது. முதலில் நிவாரண நிதி திரட்டும் போட்டி நடைபெற உள்ளது.

சார்லஸ், ஹோல்டர் அதிரடி ஆட்டம் ஆடியும் தேறாத பார்படோஸ்.. மழையால் போட்டி தடை!சார்லஸ், ஹோல்டர் அதிரடி ஆட்டம் ஆடியும் தேறாத பார்படோஸ்.. மழையால் போட்டி தடை!

அதைத் தொடர்ந்து ஐந்து சுற்று பந்தயங்கள் நடைபெற உள்ளன. ஆகஸ்ட் 29 நிவாரண நிதி போட்டியும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 15 முதல் நவம்பர் 24 வரை ஐந்து சுற்றுப் போட்டிகள் நடை பெற உள்ளன. அதில் சாய் ப்ரித்வி கலந்து கொள்ள இருக்கிறார்.

தொழில்முறை (Professional) கார் டிரைவர்கள், அமெச்சூர் டிரைவர்கள் என இரண்டு பிரிவாக பிரித்து, அதிலும் உண்மையான பந்தயம் மற்றும் சைமுலேஷன் வகை (ஈஸ்போர்ட்ஸ்) பந்தயம் என இரண்டு பிரிவுகள் உள்ளன. இதில் சைமுலேஷன் பிரிவில் தொழில்முறை டிரைவராக சாய் ப்ரித்வி பங்கேற்க உள்ளார்.

எஸ்ஆர்ஓ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அழைப்பின் பேரிலேயே தொழில்முறை டிரைவராக பங்கேற்க முடியும். அந்த வகையில் சாய் ப்ரிதிவியின் வெற்றிகளை கண்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Story first published: Thursday, August 20, 2020, 22:56 [IST]
Other articles published on Aug 20, 2020
English summary
Chennai’s Sai Prithvi to participate in GT World Challenge Asia Esports Championship
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X