For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

“அடேங்கப்பா.. இப்படி ஒரு கம்பேக்கா..” காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டி.. அரையிறுதிக்குள் பிவி.சிந்து

பிர்மிங்கம்: காமன்வெல்த் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

Recommended Video

Commonwealth Cricket இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

இங்கிலாந்தின் பெர்மிங்கம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் 9வது நாளான இன்றும் இந்தியர்கள் அசத்தி வருகின்றனர்.

காலை முதல் குத்துச்சண்டை, மல்யுத்தம் என அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறி பதக்கங்களை உறுதி செய்தனர்.

“இனியும் அவரை சேர்த்துக்க முடியாது” இந்திய அணியில் ஒதுக்கப்படும் சீனியர் வீரர்.. அதிகாரியின் தகவல் “இனியும் அவரை சேர்த்துக்க முடியாது” இந்திய அணியில் ஒதுக்கப்படும் சீனியர் வீரர்.. அதிகாரியின் தகவல்

காலிறுதிப்போட்டி

காலிறுதிப்போட்டி

இந்நிலையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேட்மிண்டன் போட்டி இன்று நடைபெற்றது. மகளிருக்கான பேட்மிண்டன் காலிறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, மலேசிய வீராங்கனையை எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கமே எதிரணி வீராங்கனையின் கை தான் ஓங்கியிருந்தது.

சரிவை சந்தித்த சிந்து

சரிவை சந்தித்த சிந்து

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற முதல் சுற்றில் இரு வீராங்கனைகளுமே மாற்றி மாற்றி புள்ளியை பெற்று வந்தனர். எனினும் கடைசியில் மலேசிய வீராங்கனையே வெற்றி பெற்றார். முதல் சுற்றில் 21 - 19 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றார். இதனால் 2வது சுற்றில் கம்பேக் கொடுத்தே தீர வேண்டும் என்ற நிலைக்கு சிந்து தள்ளப்பட்டார்.

அட்டகாசமான கம்பேக்

அட்டகாசமான கம்பேக்

அதற்கேற்றார் போலவே 2வது சுற்றில் பி.வி.சிந்து தரமான கம்பேக்கை கொடுத்துள்ளது. தொடக்கத்தில் 3 - 1 என முன்னிலை வகித்த சிந்து, 5 - 6, 9 - 7, 11 - 8 என தொடர்ச்சியாக புள்ளிகளை பெற்று வெற்றிக்கு அருகில் சென்றார். இறுதியில் ஆக்ரோஷமாக விளையாடிய அவர் 21 - 14 என்ற கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். மேலும் 1 - 1 என போட்டி சமநிலை அடைந்தது.

பரபரப்பு கட்டம்

பரபரப்பு கட்டம்

போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி சுற்றும் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு சென்றது. 6 - 6, 8 - 8 என தொடர்ச்சியாக மாறி மாறி புள்ளிகளை பெற்றனர். எனினும் விடாமல் போராடிய பி.வி.சிந்து 21 - 18 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். மேலும் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறினார்.

Story first published: Saturday, August 6, 2022, 19:23 [IST]
Other articles published on Aug 6, 2022
English summary
Commonwealth games 2022: PV Sindhu Storms in batminton quterfinals, enters into semi finals
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X