பதக்கப்பட்டியலில் முன்னேறும் இந்தியா... துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் மேலும் ஒரு தங்கம், வெண்கலம்!

Written By: Gajalakshmi

சிட்னி : காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பதக்கப்பட்டியலில் 8 தங்கப்பதக்கங்களுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீரர் ஜித்துராய் தங்கப்பதக்கத்தையும், ஓம் மிதர்வால் வெண்கலப்பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் அசத்தி வருகின்றனர். பதக்கங்களை தொடர்ந்து குவித்து வரும் வீரர்களால் இந்தியா பதக்கப் பட்டியலில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. 7 தங்கப்பதக்கங்களுடன் 4வது இடத்தில் பதக்கப்பட்டியலில் இருந்த இந்தியா துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் ஜித்துராய் தங்கப்பதக்கம் வென்றதையடுத்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

CWG games : Jitu Rai wins gold, Om Mitharval gets bronze in 10m Air Pistol

10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் ஜித்துராய் தங்கப்பதக்கத்தையும், ஓம் மிதர்வால் வெண்கலப்பதக்கத்தையும் வென்றுள்ளார். இந்தியா மொத்தம் 8 தங்கப்பதக்கங்களையும், 2 வெள்ளிப்பதங்கங்களையும், 4 வெண்கலப்பதக்கங்களையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
CWG 2018: AT 10 m Air pistol Shooting Jitu Rai wins gold, Om Mitharval gets bronze, India moved to 3rd stage in medals list of 71 countries
Story first published: Monday, April 9, 2018, 8:40 [IST]
Other articles published on Apr 9, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற