For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவுக்கு தோல்வி "கன்பர்ம்ட்"... ஜோ ரூட் 149.. 338 ரன் லீட் எடுத்தது இங்கிலாந்து!

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து பெரும் வெற்றியைப் பெறும் சூழலை இந்தியாவே ஏற்படுத்தி விட்டது.

இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 486 ரன்களைக் குவித்து விட்டது. இதன் மூலம் இந்தியாவை விட இங்கிலாந்து தற்போது 338 ரன்கள் அதிகம் பெற்று வலுவான நிலைக்குப் போய் விட்டது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 148 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அபாரமாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 149 ரன்களைக் குவித்தார்.

England Finish With 338-Run First Innings Lead After Root's Unbeaten 149

தற்போது இந்தியா தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளது. ஆனால் உணவு இடைவேளைக்கு முன்பே 2 விக்கெட்களை அது இழந்து விட்டது. முரளி விஜய், கம்பீர் அவுட்டாகி விட்டனர். ஸ்கோர் வெறும் 9 ரன்கள் மட்டுமே.

இன்று ஆட்டத்தின் 3வது நாளாகும். இன்னும் 2 நாள் ஆட்டம் பாக்கி உள்ளது. இந்திய தற்போது இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒரே ஆறுதல் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி 96 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தியதே. ஆனால் அதனால் பலன் இல்லாமல் போய் விட்டது. தற்போது இங்கிலாந்து பெரும் லீடை எடுத்துள்ளதால் இந்தியா தோல்வியைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Story first published: Sunday, August 17, 2014, 17:43 [IST]
Other articles published on Aug 17, 2014
English summary
England were bowled out for 486 in reply to India's 148, a first-innings lead of 338 runs, on the third day of the fifth Test at The Oval on Sunday. Joe Root was 149 not out after last man James Anderson fell lbw to Ravichandran Ashwin for one.
 Fit-again fast bowler Ishant Sharma marked his return to Test cricket with four wickets for 96 runs in 30 overs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X