For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூங்கிக் கொண்டிருந்த இந்தியர்களைத் தட்டி எழுப்பிய "சூப்பர் கேர்ள்".. குவியும் பாராட்டுகள்!

டெல்லி: தூங்கிக் கொண்டிருந்த மொத்த இந்தியாவையும் தட்டி எழுப்பி விட்டார் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக். அத்தனை பேரும் ஏமாற்றிய நிலையில் சத்தமே போடாமல் சாக்ஷி சாதித்து விட்டார். இப்போது பாராட்டுகளை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்று கொடுத்த பெருமையைப் பெற்றுள்ளார் சாக்ஷி. 58 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் சாக்ஷி.

சாக்ஷியின் இந்த சாதனையை இந்தியாவே கொண்டாடுகிறது. டிவிட்டரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்துகள் குவிந்து கொண்டுள்ளன.

முதல் மல்யுத்த வீராங்கனை

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்த முதல் மல்யுத்த வீராங்கனை இவர்தான் என்பதால் சாக்ஷி ஓவர்நைட்டில் சூப்பர் ஹீரோயின் ஆகியுள்ளார்.

சூப்பர் கேர்ள்

சூப்பர் கேர்ள்

டிவிட்டரில் சூப்பர் கேர்ள் என்று சாக்ஷியை வர்ணித்து பாராட்டுகள் குவிந்து கொண்டுள்ளன. மத்திய விளையாட்டு அமைச்சர் விஜய் கோயல் உள்பட பல முன்னாள், இன்னாள் வீரர்கள், வீராங்கனைகள் சாக்ஷியை வாழ்த்தி வருகின்றனர்.

வெல்டன்...கும்ப்ளே

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே போட்டுள்ள டிவிட்டில் வெல்டன். உங்களால் பெருமைப்படுகிறோம் என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் மகள்.. ராஜ்யவர்த்தன் ரத்தோர்

வெண்கலம் வென்று கொடுத்த இந்தியாவின் மகளால் அனைவரும் பெருமைப்படுகிறோம் என்று கூறியுள்ளார் மத்திய இணை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர்.

காத்திருப்பு முடிந்தது... வி.கே.சிங்.

மத்திய அமைச்சர் வி.கே.சிங் வெளியிட்டுள்ள செய்தியில் இந்தியாவின் நீண்ட காத்திருப்பு முடிந்தது. அனைவரையும் சாக்ஷி மாலிக் பெருமைப்படுத்தி விட்டார் என்று கூறியுள்ளார்.

அமேஸிங்.. ஹீனா சித்து

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஹீனா சித்துவும், சாக்ஷி மாலிக்கை பாராட்டியுள்ளார்.

வாழ்த்துகள்.. விஜய் கோயல்

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் வெளியிட்டுள்ள செய்தியில் கங்கிராஜுலேஷன்ஸ் என்று கூறியுள்ளார்.

சூப்பர் கேர்ள் சாக்ஷி.. பொமன் இராணி

நடிகர் பொமன் இராணி சூப்பர் கேர்ள் என்று சாக்ஷியை வர்ணித்துப் பாராட்டியுள்ளார்.

ஆர்.அஸ்வின் பாராட்டு

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின், இந்தியாவுக்குப் பெருமை தேடிக் கொடுத்து விட்டார் சாக்ஷி மாலிக் என்று பாராட்டியுள்ளார்.

வாவ்... ஜூவாலா கட்டா

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா வாவ் அமேஸிங் என்று கூறி பாராட்டியுள்ளார்.

Story first published: Thursday, August 18, 2016, 11:45 [IST]
Other articles published on Aug 18, 2016
English summary
It was celebration time for India and its supporters as wrestler Sakshi Malik won a bronze medal at Rio Olympics on Wednesday (August 17). Sakshi scripted history by giving India the first medal at this year's Olympics. She also became the firt ever female wrestler to claim a medal for the country.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X