For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சானியா உங்க பேச்சுல "லைட்"டா ஆணவம் தெரியுதே... இப்படிப் பேசுவதைத் தவிர்க்கலாமே!

மும்பை: ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாமல் போனால் உலகம் ஒன்றும் அழிந்து போய் விடாது என்று சானியா மிர்ஸா கூறியிருப்பது சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதுதான் ஒவ்வொரு விளையாட்டு வீரர், வீராங்கனைக்கும் கனவாகும். இதற்காக ஒவ்வொருவரும் பாடுபட்டுக் கொண்டுள்ள நிலையில், படு கேஷுவலாக சானியா பதிலளித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக பல்வேறு சர்வதேச போட்டிகளில் பட்டங்களை வாங்கிக் குவித்து வரும் அவர், நாட்டுக்குப் பெருமை தேடித் தரும் வகையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் என்று அடித்துக் கூறாமல் வென்றால் சரி, வெல்லாவிட்டால் உலகம் அழிந்து விடாது என்று படு சாதாரணமாக கூறியிருப்பதால் இது சர்ச்சையாகியுள்ளது.

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார் சானியா. அவரது பேட்டியிலிருந்து...

நம்பிக்கைதான்

நம்பிக்கைதான்

இது வெறும் நம்பிக்கைதான். நானும், லியாண்டரும் பதக்கம் வென்றால் சரி. சந்தோஷம்தான். கனவு நனவாகும்தான். ஆனால் வெல்லாவிட்டால் வாழ்க்கை தொடரத்தானே செய்யும். அது ஒன்றும் முடிந்து போய் விடாதே. உலகம் அழிந்து போய் விடாதே என்றார் அவர்.

ரமேஷ் கிருஷ்ணனுக்கு இது வேணும்

ரமேஷ் கிருஷ்ணனுக்கு இது வேணும்

முன்னாள் டென்னிஸ் ஸ்டார் ரமேஷ் கிருஷ்ணன் சமீபத்தில் கருத்து தெரிவிக்கையில், கடந்த 1996ம் ஆண்டு நடந்த அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பயஸ் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இப்போது ரியோ ஒலிம்பிக் போட்டியில் சானியாவுடன் இணைந்து ஆடுவதால் இன்னொரு பதக்கம் பிரகாசமாகியுள்ளது என்று கூறியிருந்தார். அது குறித்து நிருபர்கள் கேட்கப் போய்த்தான் இப்படி பதிலளித்துள்ளார் சானியா.

வாலினி வலி நிவாரணி

வாலினி வலி நிவாரணி

மும்பையில், வாலினி வலி நிவாரண தைலத்திற்கான பிராண்ட் அம்பாசடர்களை அறிமுகப்படுத்தும் விழா நடந்தது. பிராண்ட் அம்பாசடர்களாக சானியாவும், கால்பந்து வீரர் சுனில் செட்ரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விழாவின்போதுதான் சானியாவின் பேச்சு இப்படி இருந்தது.

சின்ன மெடல்தான்.. ஆனால் பெருமை பெரிதாயிற்றே

சின்ன மெடல்தான்.. ஆனால் பெருமை பெரிதாயிற்றே

சர்வதேச போட்டிகளில் பரிசுகளையும், வெற்றிகளையும் குவிப்பது சானியாவுக்குத் தனிப்பட்ட முறையில்தான் பெருமை தரும். ஆனால் அவர் ஒலிம்பிக்கில் வெல்லும் அந்த சின்னஞ்சிறு பதக்கத்தால் (பரிசெல்லாம் தர மாட்டார்கள், வெறும் மெடல்தான்) ஒட்டுமொத்த நாடும் பெருமை பெரும் என்பதை சானியா உணர வேண்டும்.

Story first published: Tuesday, November 3, 2015, 18:03 [IST]
Other articles published on Nov 3, 2015
English summary
Winning a medal in next year's Rio Olympics would be a dream come true, but if it did not happen it won't be the end of the world, said India's woman tennis star Sania Mirza today. "It's just a hope, right. If we (she and Leander Paes) win (a medal in mixed doubles), it will be a dream come true. If we don't, life goes on. It's not the end of the world," said the joint world no.1 in women's doubles at a promotional event here.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X