For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

‘உண்மையான உலக நாயகர்கள்’.. ஒலிம்பிக் வீரர்களுக்கு திடீர் சர்ஃபரைஸ் கொடுத்த கமல்.. பேசியது என்ன?

சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ளப்போகும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு திடீரென விடீயோ கான்ஃபரன்ஸ் செய்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சர்ஃபரைஸ் கொடுத்துள்ளார்.

Recommended Video

Tamilnadu Olympics வீரர்களுக்கு Surprise தந்த Kamal | Oneindia Tamil

ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்குகிறது.

இதில் கலந்துக்கொள்ளும் வீரர்களுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வந்த சூழலில் தமிழகத்தில் இருந்து இந்த முறை அதிகளவில் வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொள்கின்றனர்.

எல்லை மீறிய உடலுறவு.. கட்டிடங்களுக்கு இடையே கூட செக்ஸ்.. எல்லை மீறிய உடலுறவு.. கட்டிடங்களுக்கு இடையே கூட செக்ஸ்..

பட்டியலில் தமிழர்கள்

பட்டியலில் தமிழர்கள்

ஒலிம்பிக்கிற்கு இந்த முறை தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர், பல பிரிவுகளின் கீழ் பங்கேற்கவுள்ளனர். தமிழகத்தில் இருந்து நான்காவது முறையாக ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க உள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மொத்தம் தமிழ்நாடு ஒலிம்பிக் வீரர்கள் குழுவுக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வீரர்களின் விவரம்

வீரர்களின் விவரம்

வால் சண்டை பிரிவில் பங்கேற்கவுள்ள முதல் இந்தியராக, தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி, டேபிள் டென்னிஸில் இருந்து சரத் கமல், சதயன் ஞானசேகரன், வருண் அசோக் தக்கர் படகுப் போட்டிக்காக கேசி ஞானபதி, நீத்ரா குமணன், துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்து இளவேனில் வளரிவன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். தடகளத்தில் இருந்து ராஜீவ் ஆரோக்கியா, நாகநாதபாண்டி, ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலெட்சுமி சேகர் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

கமல் சர்ஃப்ரைஸ்

கமல் சர்ஃப்ரைஸ்

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வீடியோ கான்ஃபரன்ஸ் கால் மூலம் ஆலோசனை மேற்கொண்டார். திடீரென அனைத்து வீரர்களுக்கு கால் செய்து சர்ஃபரைஸ் கொடுத்தார். அவர்களின் தனிப்பட்ட அனுபவம், பின்னணி குறித்து கேட்டறிந்தார்.

உலகநாயர்கள் நீங்கள் தான்

உலகநாயர்கள் நீங்கள் தான்

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவை உலகமே திரும்பி பார்க்கவைக்கும் முயற்சியில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள். வறுமையின் பிடியில் இருந்த போதும் சாதனையாளர்களாகத் திகழும் நீங்கள்தான் உண்மையான 'உலக நாயகர்கள்'. ஒரு பெரிய பேரரசு கூட 500 வருடத்திற்கு மேல் நீடிக்க கிடையாது. அதே போல தான் ஏழ்மையும். ஒரு திறமைசாலி நினைத்தால் ஏழ்மையை ஓட ஓட விரட்ட முடியும் எனக்கூறியுள்ளார்.

பாராட்டு

பாராட்டு

மேலும் இந்த கலந்துரையாடல் குறித்து ட்விட் செய்துள்ள கமல், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தமிழகத்திலிருந்து தேர்வான வீரர்களுடன் கலந்துரையாடினேன். தமிழ் வீரமே வாகையே சூடும். நாளை உலகமே இவர்கள் புகழ் பாடும், என்று குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Thursday, July 15, 2021, 20:56 [IST]
Other articles published on Jul 15, 2021
English summary
MNM Leader kamalHaasan make a video Conference to the TN Athelets who are going participate in Olympics
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X