For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிக்ஸிங்: ஸ்ரீசாந்த், அங்கித் சவானுக்கு வாழ்நாள் தடை விதித்தது பிசிசிஐ!

By Mathi

டெல்லி: ஐபிஎல் போட்டிகளில் பிக்ஸிங்கில் ஈடுபட்டு சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த், அங்கித் சவான் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வாழ்நாள் தடை விதித்துள்ளது.

பரபரப்பான ஐபிஎல் போட்டிகளுக்கு நடுவே ஸ்பாட் பிக்சிங், மேட்ச் பிக்சிங் விவகாரம் சூடு பிடித்தது. இந்த பிக்சிங்கில் ராஜஸ்தான் அணி வீரர்கள், புக்கிகள் என பலரும் சிக்கினர்.

பிக்ஸிங்கில் ஈடுபட்ட 4 வீரர்கள்

பிக்ஸிங்கில் ஈடுபட்ட 4 வீரர்கள்

ஐபிஎல் பிக்சிங் விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த், அஜித் சான்டிலா, அங்கீத் சவான், அமித் சிங் ஆகியோர் சிக்கி சிறைக்குப் போய் வந்தனர்.

விசாரணை ஆணையம்

விசாரணை ஆணையம்

இந்த 4 பேர் மீதான வழக்கு ஒருபுறம் நடந்து வந்தாலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரவி சவானி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

விசாரணையில் நிரூபணம்

விசாரணையில் நிரூபணம்

இந்த ஆணைய விசாரணையின் போது 4 வீரர்களுமே ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தடைக்கு பரிந்துரை

தடைக்கு பரிந்துரை

அத்துடன் பிக்சிங்கில் ஈடுபட்ட வீரர்கள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கவும் விசாரணை ஆணையம் பரிந்துரைத்தது.

இன்று ஆலோசனை

இன்று ஆலோசனை

இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு இன்று கூடியது.

ஒழுங்கு நடவடிக்கையில் யார் யார்?

ஒழுங்கு நடவடிக்கையில் யார் யார்?

டெல்லியில் என். சீனிவாசன், அருண் ஜேட்லி, நிரஞ்சன் ஷா ஆகியோர் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை அறிக்கையின் பரிந்துரைகள் அடிப்படையில் ஒவ்வொரு வீரரிடம் தனிப்பட்ட முறையில் விளக்கம் கேட்டது. அதன் பின்னர் அந்த குழு வீரர்களுக்கான தண்டனை விவரத்தை வெளியிட்டது.

வாழ்நாள் தடை

வாழ்நாள் தடை

இந்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமித் சிங்குக்கு 5 ஆண்டு

அமித் சிங்குக்கு 5 ஆண்டு

கிரிக்கெட் பிக்சிங்கில் சிக்கிய மற்றொரு வீரரான அமீத் சிங்குக்கு 5 ஆண்டுகால தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சித்தார் திரிவேதிக்கு ஒரு ஆண்டு

சித்தார் திரிவேதிக்கு ஒரு ஆண்டு

மேலும் மற்றொரு வீரரான சித்தார் திரிவேதி ஓராண்டு காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹர்மீத் சிங்குக்கு மன்னிப்பு

ஹர்மீத் சிங்குக்கு மன்னிப்பு

ஹர்மீத் சிங் என்ற வீரருக்கு மன்னிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாண்டிலாவுக்கு என்ன தண்டனை?

சாண்டிலாவுக்கு என்ன தண்டனை?

சாண்டிலாவுக்கு என்ன மாதிரியான தண்டனை விதிப்பது என்பது பற்றி பின்னர் முடிவு செய்யப்பட இருக்கிறது.

Story first published: Friday, September 13, 2013, 17:33 [IST]
Other articles published on Sep 13, 2013
English summary
The BCCI has given Sreesanth and Ankeet Chavan life bans for their roles in the IPL spot-fixing case.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X