For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2018இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு கிரிக்கெட் இல்லையாம்!!

டெல்லி : கூகுள் தேடு தளத்தில் 2018ஆம் ஆண்டில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு சார்ந்த சொற்கள், பதங்கள் என்ன என்பதை குறித்த சுவாரஸ்ய தொகுப்பே இது.

எப்படியும் அதிகம் தேடப்பட்ட ஒரு விளையாட்டு கிரிக்கெட் தொடர்பான ஒன்றாக தான் இருக்கும் என நினைத்தால் அதை அப்படியே புரட்டிப் போட்டுள்ளது கால்பந்து.

ஆம், கால்பந்து கிரிக்கெட்டை முந்தி உள்ளது. அப்ப கிரிக்கெட் என்னப்பா ஆச்சு? வாங்க பார்க்கலாம்.

ஐந்து இடங்களில் விளையாட்டு

ஐந்து இடங்களில் விளையாட்டு

கூகுள்-இல் ஒட்டு மொத்த தேடலில் விளையாட்டு எங்கேயாவது இடம் பெறுமா என்று எண்ணினால், ஒட்டு மொத்த தேடல்களில் முதல் பத்து இடங்களில் ஐந்து இடங்களை பிடித்துள்ளது விளையாட்டு சார்ந்த தேடல். ஒட்டு மொத்த கூகுள் தேடல்களில் முதல் இடத்தை பிடித்து வாய் பிளக்க வைத்துள்ளது FIFA World Cup 2018 (பிபா உலகக்கோப்பை 2018).

அதிகம் தேடப்பட்ட பட்டியல்

அதிகம் தேடப்பட்ட பட்டியல்

கூகுளில் அதிகம் தேடப்பட்ட பதங்களில் FIFA World Cup 2018-க்கு அடுத்து Live Score (லைவ் ஸ்கோர்), IPL 2018 (ஐபிஎல் 2018) ஆகியவை இடம் பெற்றுள்ளன. முதல் மூன்று இடங்களை விளையாட்டு சார்ந்த சொற்கள் ஆக்ரமித்த நிலையில், எட்டாம் இடத்தில் Asia cup 2018 (ஆசிய கோப்பை 2018), பத்தாம் இடத்தில் Asian games 2018 (ஆசிய விளையாட்டு 2018) ஆகியவை இடம் பெற்றன.

விளையாட்டு நிகழ்வுகள் என்னென்ன?

விளையாட்டு நிகழ்வுகள் என்னென்ன?

இது தவிர விளையாட்டு நிகழ்வுகளில் அதிகம் தேடப்பட்டவை எவை என்ற பட்டியலும் வெளியாகி உள்ளது. FIFA World Cup 2018, IPL 2018, Asia cup 2018, Asian games 2018 மற்றும் Winter Olympics ஆகும். இதிலும் முதல் இடத்தை கால்பந்தே பெற்றுள்ளது.

கிரிக்கெட் குறைவா?

கிரிக்கெட் குறைவா?

இந்தியாவின் பிரபல விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். ஆனால், கூகுள் தேடலில் கிரிக்கெட் நிகழ்வுகள் மற்றும் சொற்கள் ஏன் அதிகமாக தேடப்படவில்லை என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. எனினும், கிரிக்கெட்டை டிவியில் பார்க்கும் கூட்டம், கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் தொடர்பான சமூக வலைதள விவாதங்கள் இவை எதுவும் குறைந்ததாக தெரியவில்லை.

பிபா கால்பந்து ஏன் டாப்?

பிபா கால்பந்து ஏன் டாப்?

பிபா கால்பந்து உலகக்கோப்பை தொடரை எப்போதும் இல்லாத அளவு இந்தியாவில் அதிக மக்கள் டிவியில் பார்த்து ரசித்தனர். அதன் மற்றொரு வெளிப்பாடாக கூகுளிலும் அதிக மக்கள் கால்பந்து உலகக்கோப்பை தொடர்பான செய்திகளை தேடியுள்ளனர்.

பந்து சேத விவகாரமும் உண்டு

பந்து சேத விவகாரமும் உண்டு

"What is" (இது என்ன) என ஆரம்பித்து ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளும் வகையில் தேடும் பதங்களில் பந்து சேத விவகாரம் (What is ball tampering?) ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலிய வீரர்கள் பான்கிராப்ட், ஸ்மித் மற்றும் வார்னர் பந்து சேதம் செய்த குற்றச்சாட்டில் சிக்கினார்கள். அது கிரிக்கெட் உலகையே உலுக்கியது.

Story first published: Tuesday, December 18, 2018, 7:43 [IST]
Other articles published on Dec 18, 2018
English summary
Here are the list of most searched sports topics in Google for the year 2018.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X