For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தடையை விலக்க வழிதேடாமல் ஒலிம்பிக்கிற்கு கூட்டிச் சென்று நர்சிங் யாதவை அவமானப்படுத்திவிட்டார்களே

By Veera Kumar

டெல்லி: ஒலிம்பிக்கில் ஆடவர் 74 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க இந்திய வீரர் நர்சிங் யாதவ் தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து இந்திய ஒலிம்பிக் சங்கம் நர்சிங் யாதவை இடைநீக்கம் செய்து இருந்தது.

இது குறித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் நர்சிங் யாதவ் ஆஜராகி மூன்று மணி நேரம் விளக்கம் அளித்தார். இதனையடுத்து நர்சிங் யாதவுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானதால், ரியோ ஒலிம்பிக்கில் அவர் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு முகமை இந்த விவகாரம் குறித்து மேல்முறையீடு செய்துள்ளது. எனவே நர்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் நர்சிங் யாதவ்-க்கு எதிராக உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்து ரியோ ஒலிம்பிக்கில் நர்சிங் யாதவ் போட்டியிட தகுதியானவர் என்று அறிவித்துள்ளது.

 மேல்முறையீடு

மேல்முறையீடு

ஆனால், தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா), ஊக்கமருந்து புகாரில் இருந்து நர்சிங் யாதவை விடுவித்துள்ளதை எதிர்த்து விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றத்தில் ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (வாடா) மேல்முறையீடு செய்தது.

 4 வருடங்கள் தடை

4 வருடங்கள் தடை

மேல்முறையீட்டை நடுவர் மன்றம் ஏற்று நர்சிங் யாதவ்வுக்குக் கடுமையான தண்டனையை அளித்துள்ளது. அதன்படி, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க நர்சிங் யாதவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று நடைபெறவுள்ள ஆடவர் 74 கிலோ ஃப்ரீஸ்டைல் போட்டியின் முதல் சுற்றில் நர்சிங் யாதவ் பங்கேற்க முடியாது. அத்துடன், அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 தலைகுனிவு

தலைகுனிவு

வாடா அமைப்பு மிகுந்த கெடுபிடியுடன் ஊக்க மருந்து விவகாரத்தை அணுகும் என தெரிந்திருந்தும் நர்சிங் யாதவை ரியோ டி ஜெனிரோ அழைத்து சென்று கடைசி நேரத்தில் அவருக்கும், நாட்டுக்கும் தலைகுனிவை பெற்றுக்கொடுத்துள்ளது இந்திய ஒலிம்பிக் கமிட்டி.

 அவமானம்

அவமானம்

வழக்கை வெற்றி பெற வழி தேடாமல் அவசரப்பட்டு நர்சிங் யாதவை ஒலிம்பிக் வில்லேஜ் வரை அழைத்து சென்று அவமானப்படுத்தியுள்ளது ஒலிம்பிக் கமிட்டி. நர்சிங் யாதவை ஆட அனுமதிக்க அரசியல் நிர்பந்தம் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

 தலைமறைப்பு

தலைமறைப்பு

தடை தகவல் வெளியானதும் நர்சிங் யாதவ் ஒலிம்பிக் வில்லேஜிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளார். இந்திய மீடியாக்கள் கண்களில் படாமல் அவர் ஒளித்து வைக்கப்பட்டுள்ளார். விரைவில் தாயகம் திருப்பி அனுப்பப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

 சிபிஐ விசாரிக்க வேண்டும்

சிபிஐ விசாரிக்க வேண்டும்

ஊக்க மருந்து விவகாரத்தில் சதி நடந்திருப்பதாக நர்சிங் யாதவ் கூறியுள்ள நிலையில் சிபிஐ விசாரணை நடத்தி இதுபோன்ற கேடுகெட்ட சதி செயல்களை அம்பலப்படுத்த வேண்டும் என்று விளையாட்டு துறையினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Story first published: Friday, August 19, 2016, 15:30 [IST]
Other articles published on Aug 19, 2016
English summary
The CAS body had set aside the decision of the Indian anti-doping body, NADA, and slapped a four-year ban on Yadav.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X