For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேசிய விளையாட்டு தினம்..! உலக அரங்கில் பட்டொளி வீசி பறந்த இந்தியர்கள்..! ஒரு மீள் பார்வை

டெல்லி: ஆக்கிப் போட்டி மூலம் வரலாற்றில் இடம்பிடித்துவிட்ட தயான் சந்த். அவரது பிறந்த தினம் இன்று. அந்த நாயகனின் பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறது.

இந்த நாளில் உலக அரங்கில் ஒளிர்ந்த இந்திய நட்சத்திரங்கள் பற்றிய தொகுப்பை தற்போது பார்க்கலாம். இந்தியாவின் பல்வேறு விளையாட்டுத் துறைகளில் சாதித்தவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் முதலில் வருபவர் தயான் சந்த்.

இந்திய ஆக்கி ரசிகர்களால் 'ஹாக்கியின் மந்திரவாதி என இன்றளவும் கொண்டாடப்படும் ஓர் ஆளுமை. ஒலிம்பிக்கில் தங்கம் என்பது இப்போதைய நிலைமைக்கு இந்தியாவுக்கு எட்டாக்கனி. ஆனால் தயான் சந்த் தலைமையிலான இந்திய அணி, 3 முறை தங்கம் வென்று சரித்திர சாதனை படைத்திருக்கிறது. அதுவும் தொடர்ந்து, என்பது தான் அதில் சிறப்பு.

மதமானது கிரிக்கெட்

மதமானது கிரிக்கெட்

அடுத்து, நம் கண் முன்னே முதலில் வருவது கிரிக்கெட். காரணம் கிரிக்கெட்டை பொறுத்த வரை இந்தியர்களுக்கு அது ஒரு விளையாட்டல்ல.. ஒரு மதம். அத்தகைய கிரிக்கெட்டின் பிரபலம் சச்சின் டெண்டுல்கர்.

சாதனை சச்சின்

சாதனை சச்சின்

கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் இவரை கிரிக்கெட்டை தெரிந்த நாடுகளுக்கு சச்சின் என்றால் கிரிக்கெட். கிரிக்கெட் போட்டி தெரியாத நாடுகளுக்கு, கிரிக்கெட் என்றாலே அது சச்சின். அவரது சாதனைகள் பல ஆண்டுகள் பேசும் பெருமை உடையவை.

மில்கா சிங்

மில்கா சிங்

மில்கா சிங், காமன்வெல்த், ஆசிய போட்டிகளில் பல பதங்கங்களை வென்று சாதித்தவர். தடகள வீரரான, இவர் பறக்கும் சீக்கியர் என ரசிகர்களால் கொண்டாடப் பட்டார். இவரை மையமாக வைத்து, படங்களும் பாலிவுட்டில் எடுக்கப்பட்டிருக்கின்றன.

சாதித்த கர்ணம்

சாதித்த கர்ணம்

கர்ணம் மல்லேஸ்வரி.. 2000ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் பளு தூக்கும் போட்டியில் வெண்கலம் வென்றார். அன்று அவர் தொடக்கி வைத்த ஒரு விஷயம்.. இந்திய பெண்கள் மென்மையானவர்கள் அல்ல என்று. அர்ஜூனா , ராஜீவ் காந்தி கேல் ரத்னா , பத்மஸ்ரீ என விருதுகள் இவரை ஆந்திராவின் இரும்பு பெண்ணாக மாற்றியது.

5 முறை தங்கம்

5 முறை தங்கம்

மேரி கோம்... வறுமை, திருமணம், குழந்தை இவை எல்லாவற்றையும் கடந்து குத்துசண்டை களத்திற்குள் நுழைந்தவர். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 6 முறை தங்கம், ஆசிய போட்டிகளில் 5 முறை தங்கம் வென்றவர். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் என பதக்க வேட்டை நடத்தி சாதித்தவர்.

மகுடம் சூட்டியவர்

மகுடம் சூட்டியவர்

சாக்ஷி மாலிக்.. மகளிர் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு மகுடம் சூட்டியவர் சாக்ஷி மாலிக்... 2016 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர். காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் என பங்கேற்ற போட்டிகள் அனைத்திலும் பதக்கங்களை அள்ளியவர்.

டென்னிஸ் மிர்சா

டென்னிஸ் மிர்சா

சானிய மிர்சா... டென்னிஸ் என்றாலே சானியா மிர்சா தான். டென்னிஸ் மிர்சா என்றே அழைக்கப் பட்டவர். அழகு பதுமையான அவர் கலப்பு இரட்டையர் மற்றும் இரட்டையர் போன்ற பிரிவுகளில் கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று சாதித்தார். அவருக்கு, பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது.

முதல் பெண்மணி

முதல் பெண்மணி

சாய்னா நேவால்.. இந்திய பேட்மின்டனின் தங்க மகள். உலக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் இந்திய பெண்மணி என்ற பெருமை பெற்றவர். ஒலிம்பிக்கில் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பதக்க கனவை நனவாக்கிய சாதனை நாயகி.

தங்க மங்கை

தங்க மங்கை

பி.வி.சிந்து, இந்தியாவின் தற்போதைய தங்க மங்கை. உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டனில் இந்தியாவுக்கு முதன்முறையாக தங்கம் பெற்று கொடுத்த பெருமைக்குரியவர். அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே லட்சியம் என்று சபதம் எடுத்திருக்கிறார்.

Story first published: Thursday, August 29, 2019, 18:41 [IST]
Other articles published on Aug 29, 2019
English summary
National sports day celebrated across the country.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X