For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்கை விட அதிக தூரம்..இருந்தும் தங்கம் இல்லை..இந்தியாவுக்கு சாதனை..நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து

ஒரேகன் : அமெரிக்காவில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

Recommended Video

Neeraj Chopra பதக்கம் வென்று அசத்தல் | World Athletics Championships *Sports

இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை தட்டி சென்றார்.

இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய ஆடவர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.

உலக தடகள போட்டிகள்: நீரஜ் சோப்ரா பதக்கம் வென்று அசத்தல்.. 19 ஆண்டுக்கு பின் இந்தியாவுக்கு பெருமை! உலக தடகள போட்டிகள்: நீரஜ் சோப்ரா பதக்கம் வென்று அசத்தல்.. 19 ஆண்டுக்கு பின் இந்தியாவுக்கு பெருமை!

அதிக தூரம்

அதிக தூரம்

இதற்கு முன் கேரளாவைச் சேர்ந்த அஞ்சு பார்பி ஜார்ஜ் வெண்கலம் வென்றது இந்தியாவிற்கு முதல் பதக்கமாக இருந்தது. நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டியில் 87.58 மீட்டர் தூரம் வீசி முதல் தங்கத்தை தடகளப் பிரிவில் தட்டிச் சென்றார். தற்போது அதைவிட அதிக தூரம் வீசிய நீரஜ் சோப்ராவுக்கு இம்முறை வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.

 நீரஜ் பேட்டி

நீரஜ் பேட்டி

கிரேனேடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர் 90.54 மீட்டர் தூரம் வீசி தனது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இதனிடையே வெற்றி பெற்ற நீரஜ் சோப்ரா பேசுகையில், தமக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர், விளையாட்டு துறை அமைச்சகம் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

பிரதமர் வாழ்த்து

பிரதமர் வாழ்த்து

ஒலிம்பிக்கில் செயல்பட்டதை விட தற்போது அதிக தூரம் வீசியும் வெள்ளி பதக்கம் தான் கிடைத்திருப்பதாக குறிப்பிட்டவர் முதலிடத்திற்காக தொடர்ந்து முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார். இதனிடையே நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விளையாட்டு துறைக்கு இது சிறந்த தருணமாகும் என்று குறிப்பிட்டுள்ள அவர் நீரஜ் சோப்ரா இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அஞ்சு பாபி ஜார்ஜ் வாழ்த்து

அஞ்சு பாபி ஜார்ஜ் வாழ்த்து

இதேபோன்று உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அஞ்சு பார்பி ஜார்ஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .இந்த மேஜிக் தருணத்திற்கு வாழ்த்துக்கள் இந்த விசேஷப் பட்டியலில் வந்து இணைந்ததற்கு வரவேற்கிறேன் என்று அவர் பாராட்டியுள்ளார். இதேபோன்று முன்னாள் தடகள வீராங்கனை பிடி உஷா குறிப்பிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் நீரஜ் சோப்ரா மீண்டும் தன் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக கூறியுள்ளார்.

Story first published: Sunday, July 24, 2022, 16:40 [IST]
Other articles published on Jul 24, 2022
English summary
Neeraj chopra bettered his olympic record and wishes pouring for the acheivementஒலிம்பிக்கை விட அதிக தூரம்..இருந்தும் தங்கம் இல்லை..இந்தியாவுக்கு சாதனை..நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X