For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்.. ஜிம்னாஸ்டிக் பிரிவில் ஏமாற்றம்.. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ப்ரனிதி நாயக் படுதோல்வி

டோக்கியோ: இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ப்ரனிதி நாயக் இன்று நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறினார். இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் தொடரில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் கலந்து கொண்ட ஒரே வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் 2020 தொடரில் இன்று இந்தியா பல்வேறு போட்டிகளில் ஆடுகிறது. காலையிலேயே துப்பாக்கி சூடு, துடுப்பு படகு போட்டிகளில் இந்தியா ஆடியது. அதன்பின் பேட்மிண்டன் பெண்கள் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றிபெற்றார்.

ஒலிம்பிக் 2020 வில்வித்தை ரேங்கிங் சுற்று.. மோசமாக சொதப்பிய இந்திய வீரர்கள்.. 3 வீரர்களும் சறுக்கல்! ஒலிம்பிக் 2020 வில்வித்தை ரேங்கிங் சுற்று.. மோசமாக சொதப்பிய இந்திய வீரர்கள்.. 3 வீரர்களும் சறுக்கல்!

இந்த நிலையில் இன்று காலை இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ப்ரனிதி நாயக் தகுதி சுற்று போட்டிகளில் ஆடினார்.

முதல் போட்டி

முதல் போட்டி

ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ப்ரனிதி நாயக்கிற்கு இதுதான் முதல் போட்டியாகும். இவருக்கு 26 வயதுதான் ஆகிறது. தேசிய போட்டிகளில் சிறப்பாக ஆடிய நிலையில் இவர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பப்பட்டார். ஆனால் இன்று தொடக்கத்தில் இருந்தே தகுதி சுற்று போட்டியில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ப்ரனிதி நாயக் சரியாக ஆடவில்லை.

மோசம்

மோசம்

Floor பிரிவு ஜிம்னாஸ்டிக்கில் 12.133 புள்ளிகள் பெற்றார். இந்த பிரிவில் மட்டுமே ப்ரனிதி நாயக் கொஞ்சம் கவனிக்கத்தக்க வகையில் ஆடினார். ஆனால் Vault, Uneven bars, Balance beam மூன்று பிரிவிலும் பெரிதாக ஜொலிக்கவில்லை.

தோல்வி

தோல்வி

Vault பிரிவில் 13.466 புள்ளிகள் மட்டுமே பெற்றார். அதேபோல் Uneven bars பிரிவிலும் வெறும் 9.033 புள்ளிகள் பெற்றார். கடைசியாக நடந்த Balance beam பிரிவில் 9.433 புள்ளிகள் பெற்றார். இவரின் புதிய பயிற்சியாளர் 27 வயதே நிரம்பிய இளைஞர் என்பதால் அவராலும் ப்ரனிதி நாயக்கை பெரிதாக வழிகாட்ட முடியவில்லை. மொத்தமாக அனைத்து பிரிவுகள் முடிவிலும் வெறும் 42.565 புள்ளிகளை ப்ரனிதி பெற்றார்.

வெளியேற்றம்

வெளியேற்றம்

இதனால் 12வது இடம் பிடித்து தகுதி சுற்று போட்டியில் ப்ரனிதி தோல்வி அடைந்தார். முதல் எட்டு வீராங்கனைகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்பதால் ப்ரனிதி தகுதி சுற்றிலேயே வெளியேறினார். இந்த தகுதி சுற்றில் இத்தாலியின் ஆலிஸ் 54199 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்.

Story first published: Sunday, July 25, 2021, 17:21 [IST]
Other articles published on Jul 25, 2021
English summary
Olympic 2020: India's only player Pranati Nayak fails to shine in gymnastics managed to take 12th spot.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X