துப்பாக்கி சுடுதலில் தொடர்ந்து சொதப்பல்.. 10 மீட்டர் ரைபல் பிரிவிலும் 2 இந்திய வீரர்கள் வெளியேற்றம்

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இன்று இந்தியாவின் திவ்யனேஷ் சிங் பன்வார், தீபக் குமார் இரண்டு பேரும் இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறினார்கள்.

ஒலிம்பிக் 2020 தொடரில் இந்தியா தொடர்ந்து துப்பாக்கி சுடுதல் போட்டியில் சொதப்பி வருகிறது. இன்று காலை இந்தியாவின் மனு பாகர், யாஷாஸ்வினி தேஸ்வால் இரண்டு பேருமே பெண்கள் 10 மீ பிஸ்டல் பிரிவில் தோல்வி அடைந்தனர்.

மெகா ஏலம்: CSK தக்க வைக்கும் மெகா ஏலம்: CSK தக்க வைக்கும்

இரண்டு பேருமே இறுதிசுற்றுக்கு தகுதி பெறவில்லை. நேற்று நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் சரியாக ஆடவில்லை.

ஆடவில்லை

ஆடவில்லை

நேற்று துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட யாரும் சரியாக ஆடவில்லை. சோரப் சவுத்திரி இறுதி சுற்றுக்கு தேர்வானாலும் எந்த பதக்கமும் வெல்லவில்லை. அபிஷேக் சர்மா, இளவேனில் வாலறிவன், அபூர்வி சந்தேலா ஆகியோரும் இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை.

இன்று காலை

இன்று காலை

இன்று காலை 10 மீட்டர் ரைபல் பிரிவில் இந்தியாவில் திவ்யனேஷ் சிங் பன்வார், தீபக் குமார் கலந்து கொண்டனர். இதே பிரிவில் பெண்கள் அணி தோல்வி அடைந்த நிலையில் ஆண்கள் அணியாவது வெற்றிபெறுமா என்று எதிர்பார்ப்பு இருந்தது. இதில் ஆண்கள் பிரிவில் குறைந்தபட்சம் 630 புள்ளிகளையாவது எடுக்க வேண்டும்.

சுட வேண்டும்

சுட வேண்டும்

ஒரு சுற்றில் 10 முறை சுட வேண்டும். ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 109 பெற முடியும். அதிகபட்சம் ஒரு நபர் 6 சுற்று முடிவில் 654 புள்ளிகள் பெற முடியும். ஆண்கள் 10 மீட்டர் ரைபல் பிரிவில் இன்று 47 பேர் கலந்து கொண்டனர். இதில் திவ்யனேஷ் சிங் பன்வார், தீபக் குமார் இரண்டு பேரும் இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறினார்கள்.

 வெளியேற்றம்

வெளியேற்றம்

10 மீட்டர் ரைபல் பிரிவில் இந்தியாவில் திவ்யனேஷ் சிங் பன்வார் வெளியேறினார். 622.8 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில் திவ்யனேஷ் சிங் பன்வார் வெளியேறினார். 10 மீட்டர் ரைபல் பிரிவில் இந்தியாவில் தீபக் குமாரரும் வெளியேறினார். 624.7 புள்ளிகள் பெற்ற நிலையில் தீபக் குமார் வெளியேறினார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Olympics 2020: Deepak Kumar, Divyansh Singh failed to qualify for the men's 10m rifle final today.
Story first published: Sunday, July 25, 2021, 11:04 [IST]
Other articles published on Jul 25, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X