For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் 2020 ஆண்கள் ஹாக்கி.. அர்ஜென்டினாவை வீழ்த்திய இந்திய அணி.. 3வது வெற்றி பெற்று அசத்தல்!

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 ஹாக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

ஒலிம்பிக் 2020 ஹாக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி பெரிய அளவில் நம்பிக்கையை அளித்து வருகிறது. இன்று நடந்த ஆட்டத்தோடு இதுவரை 4 போட்டிகளில் இந்தியா மூன்றில் வென்றுள்ளது.

இன்று அர்ஜென்டினாவிற்கு எதிராக நடந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி வீரர்கள் களத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள். முக்கியமாக இந்திய வீரர்கள் வருண் குமார். விவேக் இரண்டு பேருமே ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினார்கள்.

ஒலிம்பிக் பேட்மிண்டன்.. ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பிவி சிந்து.. காலிறுதிக்கு தகுதி பெற்றார்ஒலிம்பிக் பேட்மிண்டன்.. ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பிவி சிந்து.. காலிறுதிக்கு தகுதி பெற்றார்

கோல்

கோல்

ஆட்டம் தொடங்கிய 22 நிமிடத்தில் இந்தியா முதல் கோல் போட்டது. இந்தியாவின் வருண் குமார் அசாத்தியமான கோல் அடித்து இந்திய அணியை லீட் எடுக்க வைத்தார். அதன்பின் அர்ஜெண்டினா அணி மீண்டு வர முடியாமல் நீண்ட நேரம் திணறியது.

அர்ஜென்டினா

அர்ஜென்டினா

பின்னர் ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் சேஸல்லா முதல் கோல் அடித்தார். இதன் பின் இரண்டு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் கடுமையாக திணறியது. இதனால் ஆட்டம் கடைசி 5 நிமிடம் வரை விறுவிறுப்பாக சென்றது.

திணறல்

திணறல்

ஆனால் கடைசி 5 நிமிடம் இருக்கும் போது இந்தியாவின் விவேக் இன்னொரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 2 கோல்கள் அடித்து முன்னிலைபெற்றது.கடைசி நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க மீண்டும் 3வது கோலை இந்தியா பதிவு செய்தது. அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.இதன் மூலம் குழு ஆட்டத்தில் இந்தியா ஒரே ஒரு தோல்வியுடன் இரண்டாம் பிடித்துள்ளது.

வெற்றி

வெற்றி

இதனால் அடுத்த சுற்றுக்கு இந்தியா செல்வது உறுதியாகி உள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரை முதலில் வெற்றியோடுதான் தொடங்கியது. நியூசிலாந்துக்கு எதிராக 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 7-1 கோல் கணக்கில் மிக மோசமான தோல்வியை இந்தியா தழுவியது. அதன்பின் ஸ்பெயினுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 29, 2021, 18:57 [IST]
Other articles published on Jul 29, 2021
English summary
Olympics 2020: Indian hockey team wins against Argentina in 3-1 game and ened up second place in group stage.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X