For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேலை செய்யாத துப்பாக்கி.. கோச் செய்த தவறு.. கலங்கிய "மனு பாகர்".. துப்பாக்கி நிறுவனம் குற்றச்சாட்டு!

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் துப்பாக்கி சுடுதலில் பெண்கள் 10 மீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாகர், தோல்வி அடைந்ததற்கு அவரின் துப்பாக்கி பழுதடைந்தது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மனு பாகரின் பயிற்சியாளர் துப்பாக்கியை சரி செய்ய முயற்சி எதையும் செய்யவில்லை என்று துப்பாக்கி தயாரிப்பு நிறுவனம் குற்றஞ்சாட்டி உள்ளது.

ஒலிம்பிக் 2021 தொடரில் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் இந்தியாவிற்கு மிகவும் மோசமாக அமைந்தது இருந்தது. இந்தியா சார்பாக மொத்தம் 15 பேர் ஒலிம்பிக்கில் பல்வேறு துப்பாக்கி சுடுதல் பிரிவு போட்டிகளுக்கு தேர்வாகி உள்ளனர்.

ஆனால் தனி பிரிவிலும், குழு பிரிவிலும் இதுவரை இவர்கள் இந்தியாவிற்காக வெற்றிபெறவில்லை. துப்பாக்கி சுடுதலில் வரிசையாக பலரும் குழு போட்டிகளிலேயே தோல்வி அடைந்து வெளியேறி வருகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் மனு பாகர், யாசாஷ்வினி தேஸ்வால் இரண்டு பேருமே பெண்கள் 10 மீ பிஸ்டல் பிரிவில் தோல்வி அடைந்தனர்.

ஒலிம்பிக் 2020.. 10 மீட்டர் ஏர் பிஸ்டல்.. இந்தியாவின் மனு பாக்கர் - சௌரப் சௌத்ரி ஜோடி தோல்விஒலிம்பிக் 2020.. 10 மீட்டர் ஏர் பிஸ்டல்.. இந்தியாவின் மனு பாக்கர் - சௌரப் சௌத்ரி ஜோடி தோல்வி

துப்பாக்கி

துப்பாக்கி

பெண்கள் பிஸ்டல் பிரிவில் மொத்தம் 580 புள்ளிகளை குறைந்தபட்சம் எடுக்க வேண்டும். இதில் முதல் எட்டு இடங்களுக்குள் வரும் வீராங்கனைகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இதில் 12வது இடம் மட்டுமே பிடித்த மனு அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறினார். 10 மீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாகர், தோல்வி அடைந்ததற்கு அவரின் துப்பாக்கி பழுதடைந்தது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

காரணம்

காரணம்

முதல் சுற்றில் 98 புள்ளிகளை சிறப்பாக எடுத்து அசத்தி இருந்த மனு இரண்டாவது சுற்றில் பின் தாங்கினார். அவரின் துப்பாக்கி சரியாக வேலை செய்யாததால் 18 நிமிடங்கள் அவரால் ஆட முடியவில்லை. இதனால் மற்ற வீராங்கனைகள் நான்காம் சுற்று ஆடி வந்த போது மனு 2ம் சுற்று ஆடும் நிலை ஏற்பட்டது. அவசர அவசரமாக மனு 3 மற்றும் 4ம் சுற்றுகளை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் அவர் தோல்வியை தழுவினார்.

தோல்வி

தோல்வி

இந்த நிலையில் மனு உபயோகப்படுத்திய துப்பாக்கியின் உற்பத்தி நிறுவனமான ஸ்விஸ் நாட்டின் மோர்னி இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளது. அதில், நாங்கள்தான் மனுவின் துப்பாக்கியை உருவாக்கியது. பல ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகள் எங்கள் துப்பாக்கியை பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்கு உதவுவதற்காக எங்கள் குழு ஒலிம்பிக் கிராமத்தில் உள்ளது.

உதவி

உதவி

துப்பாக்கி சுடும் இடத்தில்தான் எங்கள் குழு இருந்தது. ஆனால் மனுவோ அவரின் கோச்சோ எங்களை அணுகவில்லை. துப்பாக்கியை சரி செய்யும்படி எங்களிடம் உதவி கேட்கவில்லை, மனுவின் தனிப்பட்ட கோச் தாமாக அந்த பழுதடைந்த துப்பாக்கியை சரி செய்துள்ளார். இதற்கு 18 நிமிடங்களை அவர் செலவு செய்துள்ளார். அதன்பின் துப்பாக்கியை அவர் சரி செய்த பின்பும் கூட அதில் கோளாறு இருந்துள்ளது.

மோசம்

மோசம்

எங்களை அணுகி இருந்தால் நாங்கள் இன்னும் வேகமாக துப்பாக்கியை சரி செய்து இருப்போம். துப்பாக்கியை சரி செய்த பின் டெஸ்ட் சூட் கூட செய்யாமல் மனு அதை பயன்படுத்தி உள்ளார். துப்பாக்கியில் இருக்கும் லிவரில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இதை மாற்ற தெரியாமல் நேரத்தை செலவு செய்துள்ளனர் என்று துப்பாக்கி நிறுவனமான மோர்னி குற்றஞ்சாட்டி உள்ளது.

உதவி

உதவி

வீரர், வீராங்கனைகளுக்கு உதவி செய்வதற்காக நாங்கள் அங்கேதான் இருந்தோம். ஆனால் இந்திய தரப்பு எங்கள் உதவியை நாடவில்லை என்று அந்த நிறுவனம் குற்றஞ்சாட்டி உள்ளது. துப்பாக்கியை சரி செய்வதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாகவே துப்பாக்கி சுடுதலில் பெண்கள் 10 மீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 27, 2021, 9:27 [IST]
Other articles published on Jul 27, 2021
English summary
Olympics 2020: Manu Bhaker or her coach did not contact us to repair the gun during the women's 10m air pistol stage competition.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X