For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடி தூள்.. ஒரே பெயரில் 2 கிராண்ட் மாஸ்டர்கள்.. இந்தியாவின் 76வது கிராண்ட் மாஸ்டர் ஆனார் பிரணவ்

பெங்களூரு : இந்தியாவில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்ற பிறகு அதன் மீதான ஆர்வம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

ரசிகர்கள் பலரும் செஸ் விளையாட்டு குறித்து பல்வேறு தகவல்களையும் செய்திகளையும் தேடி தேடி படிக்கிறார்கள்.

அப்படி ஒரு ரசிகர்கள் நீங்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்காக தான். கிராண்ட் மாஸ்டர் என்ற தகுதியைப் பெற சர்வதேச செஸ் தரவரிசை புள்ளிகளில் 2500 என்ற அளவை எட்ட வேண்டும்.

பதக்கம் தான் முக்கியம்.. வளைகாப்பு நிகழ்ச்சி நிறுத்தம்.. செஸ் ஒலிம்பியாட்டில் நெகிழ்ச்சிபதக்கம் தான் முக்கியம்.. வளைகாப்பு நிகழ்ச்சி நிறுத்தம்.. செஸ் ஒலிம்பியாட்டில் நெகிழ்ச்சி

கடைசி தகுதி

கடைசி தகுதி

இந்த வகையில் கர்நாடகாவைச் சேர்ந்த பிரணவ் ஆனந்த் இந்தியாவின் 76 ஆவது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று இருக்கிறார். யூத் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரணவ் ஆனந்த் எமன் உஹன்யாவை எதிர்த்து விளையாடினார். இதில் அவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான கடைசி தகுதியான 2500 தரவரிசை புள்ளியை தாண்டினார்.

16 வயது வீரர்

16 வயது வீரர்

76 வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் அவருக்கு கிடைத்தது பிரணவ் ஆனந்த் பயிற்சியாளர் தமிழகத்தை சேர்ந்த வெங்கடாசலம் சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது. பிரணவ் ஆனந்த் வெறும் 16 வயது நிரம்பிய வீரர் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரே பெயர்

ஒரே பெயர்

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இந்தியாவின் 75வது கிராண்ட் மாஸ்ட்ராக தமிழகத்தை சேர்ந்த பிராண்வ் வெங்கடேஷன் கடந்த மாதம் வென்றார். தற்போது பிரணவ் என்ற ஒரே பெயரில் 2 வீரர் ஒரு மாதம் இடைவெளியில் கிட்டத்தட்ட கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளனர்.

இந்தியாவின் இடம்

இந்தியாவின் இடம்

உலக அளவில் அதிக கிராண்ட் மாஸ்டர் பட்டங்களை வென்ற நாடு பட்டியலில் இந்தியா தற்போது 5வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் 293 கிராண்ட் மாஸ்டர்களுடன் ரஷ்யாவும், 2வது இடத்தில் 115 கிராண்ட் மாஸ்டர்களுடன் ஜெர்மனி 2வது இடத்திலும், உக்ரைன் 113 கிராண்ட் மாஸ்டர்களுடன் 3வது இடத்திலும், 108 கிராண்ட் மாஸ்டர்களுடன் அமெரிக்கா 4வது இடத்திலும் உள்ளது.

Story first published: Friday, September 16, 2022, 10:46 [IST]
Other articles published on Sep 16, 2022
English summary
Prannav Anand becames 76 th Grandmaster of India - country wise GM report is hereஇந்தியாவுக்கு 76வது கிராண்ட் மாஸ்டர் கிடைத்தார்.. பிரனவ் ஆனந்த அசத்தல்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X