For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதெப்படிங்க உடனே சாஸ்திரியால் ரிசல்ட் தர முடியும்... வாயை வச்சுட்டார் கவாஸ்கர்!

லண்டன்: ரவி சாஸ்திரியால் உடனே அதிரடியான மாற்றத்தையும், முடிவுகளையும் கொண்டு வர முடியாது என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

ரவி சாஸ்திரி நியமனத்தை கவாஸ்கர் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார். அதேசமயம், உடனடியாக ரவியிடமும், சஞ்சய் பாங்கர், பரத் அருண் ஆகியோரிடமும் பெரிய அளவில் எதையும் எதிர்பார்ப்பது சரியாக இருக்காது என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார்.

பாங்கரும், அருணும் உதவிப் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார். சாஸ்திரி, இந்திய அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிஜமான அக்கறைதான் காரணம்

நிஜமான அக்கறைதான் காரணம்

புதிய நியமனங்கள் குறித்து கவாஸ்கர் கூறுகையில், இந்த நியமனங்கள் மூலம் நமது வாரியம், இந்திய கிரிக்கெட் மீது நிஜமான அக்கறையுடன் உள்ளது, வணிக நோக்கில் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நிச்சயம் மாற்றம் வரும்

நிச்சயம் மாற்றம் வரும்

இவர்களின் நியமனத்தால் நிச்சயம் மாற்றம் வரும். இவர்கள் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். ஆனால் உடனே வராது. அதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

இது என்ன இன்ஸ்டன்ட் காபியா..

இது என்ன இன்ஸ்டன்ட் காபியா..

இது இன்ஸ்டன்ட் காபி அல்ல. எனவே சற்று பொறுமையுடன் அனைவரும் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

நல்லா பேசுவாப்ல...

நல்லா பேசுவாப்ல...

சாஸ்திரியும், பாங்கரும், வீரர்களுடன் எளிதில் கலந்துரையாடக் கூடிய திறமை படைத்தவர்கள். அதுதான் தற்போது மிகவும் முக்கியமானது.

பிளட்சரை விட ரவி பெட்டர்

பிளட்சரை விட ரவி பெட்டர்

என்னைப் பொறுத்தவரையில் பிளட்சரை விட ரவி சாஸ்திரி பெட்டர். நான் 2004ல் வெறும் பேட்டிங் ஆலோசகராக மட்டுமே இருந்தேன். ஆனால் ரவி அப்படி இல்லை, சகலத்திலும் அவர் தனது கருத்துக்களைக் கொண்டு செல்ல முடியும், மெருகேற்ற முடியும். பிளட்சரும் கூட ரவிக்குக் கட்டுப்பட்டுத்தான் நடப்பார் என்று அறிகிறேன்.

கோச்சிங்தான் மோசம்

கோச்சிங்தான் மோசம்

நமது அணி சரியான கோச்சிங் இல்லாமல்தான் தடுமாறி வருகிறது. புதிய கோச்சிங் உதவியாளர்கள் இதை சரி செய்வார்கள் என்று நம்புகிறேன் என்றார் கவாஸ்கர்.

Story first published: Wednesday, August 20, 2014, 8:27 [IST]
Other articles published on Aug 20, 2014
English summary
Sunil Gavaskar welcomed the appointments of Ravi Shastri as director of cricket and Sanjay Bangar and Bharat Arun as assistant coaches of the Indian team but warned against expecting instant results. After India's 3-1 defeat in the Test series against England, the Board of Control for Cricket in India, in a clear snub to coach Duncan Fletcher, made three new appointments to fuel speculation that Fletcher will quit before India's home series against the West Indies later this year.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X