For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு-இந்திய பாட்மிண்டன் வாரியம் அறிவிப்பு

By
Saina Nehwal
டெல்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் இந்திய பாட்மிண்டன் வீரர்கள், வீராங்கனைகளுக்கு, ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய பாட்மிண்டன் வாரியம் அறிவித்துள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 16 ஆயிரம் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவில் இருந்து 13 விளையாட்டுகளில் தொடர்புடையை மொத்தம் 81 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்திய பாட்மிண்டன் அணியின் சார்பாக சாய்னா நேவால், ஜூவாலா கட்டா, டிஜூ, காஷ்யப், அஷ்வினி பொன்னப்பா என்று மொத்தம் 5 பேர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் சாய்னா நேவால் மீது பதக்கம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறும் இந்திய வீரர் அல்லது வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் வகையில் இந்திய பாட்மிண்டன் வாரியம் நேற்று பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.

இது குறித்து இந்திய பாட்மிண்டன் வாரியத் தலைவர் அகிலேஷ் தாஸ் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் இந்தியருக்கு ரூ.1 கோடியும், வெள்ளிப்பதக்கம் வென்றால் ரூ.50 லட்சமும், வெண்கலம் பெற்றால் ரூ.25 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Saturday, July 21, 2012, 11:32 [IST]
Other articles published on Jul 21, 2012
English summary
In an attempt to boost the morale of the Olympic-bound shuttlers, the Badminton Association of India (BAI) announced a cash prize of Rs.1 crore for the gold medal winner. The silver medallist will be given a sum of Rs 50 lakh and the bronze will receive Rs 25 lakh.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X