For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்கால் வாழ்வாதாரம் இழந்த மக்கள்.. வெளிச்சத்திற்கு வந்த அநீதி சம்பவம்.. இப்படி ஒரு செயலா?

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிக்காக டோக்கியோ மக்களுக்கு நடந்துள்ள அநீதி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உலகின் மிகப்பெரும் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கியுள்ளது.

ஒலிம்பிக் சின்னம்: ஏன் 5 வளையங்கள்.. 6 நிறங்கள் எதனை குறிக்கிறது.. தெரிந்துக்கொள்ள வேண்டிய பின்னணி!ஒலிம்பிக் சின்னம்: ஏன் 5 வளையங்கள்.. 6 நிறங்கள் எதனை குறிக்கிறது.. தெரிந்துக்கொள்ள வேண்டிய பின்னணி!

கொரோனா காரணமாக கடந்தாண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் மிகுந்த பாதுகாப்புகளுடன் தொடங்கியுள்ளது.

தொடங்கியது ஒலிம்பிக்

தொடங்கியது ஒலிம்பிக்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், ஜப்பான் நாட்டின் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்களும் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை ஒலிம்பிக் போட்டிக்காக முதலீடு செய்துள்ளது. ஆனால் இந்தாண்டும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதில் இறுதி வரை சிக்கல் நீடித்து கொண்டே இருந்தது. ஏனென்றால் ஒலிம்பிக் கிராமத்தில் 66 பேருக்கும் மேல் கொரோனா உறுதியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலிலும் வெற்றிகரமாக தற்போது ஒலிம்பிக் தொடர் தொடங்கியுள்ளது.

மக்களுக்கு அநீதி

மக்களுக்கு அநீதி

இந்நிலையில் ஒருபுறம் ஒலிம்பிக்கால் டோக்கியோ நகரம் ஜொலித்து வந்தாலும், அங்கிருந்த ஏழை மக்களின் வாழ்க்கை இருட்டிற்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது டோக்கியோவில் உள்ள வீதிகளில் வீடுகளின்றி சாலையில் வசித்து வந்தவர்கள் அனைவரும் மக்கள் நடமாட்டம் குறைவான பகுதிகளுக்கு அடாவடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

 அடாவடி

அடாவடி

நகரம் முழுவதும் நிகழ்ச்சிகான கலைப்பொருட்களை ஏற்படுத்துவார்கள் என்பதால் பூங்கா, ரயில் நிலையங்கள், முக்கிய சாலைகள் போன்ற இடங்களில் இருந்த வீடுகளற்ற மக்கள் அனைவரும் வேறு இடத்திற்கு செல்ல அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளானர். இதனை அந்நாட்டின் அரசு அடாவடியாக செய்ததாகவும் கூறப்படுகிறது.

டோக்கியோ மட்டுமல்ல

டோக்கியோ மட்டுமல்ல

இதுபோன்ற செயல்களில் டோக்கியோ நகரம் மட்டும் செய்யவில்லை. இதற்கு முன்னர் இந்தியாவும் இதே செயலினை செய்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற காமன் வெல்த் போட்டிகளுக்காக டெல்லியின் முக்கிய வீதிகளில் இருந்த 1,00,000 குடும்பங்கள் அடாவடியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். இதனால் பிச்சைக்காரர்கள், சாலை வாசிகள், வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர்.

Story first published: Friday, July 23, 2021, 23:02 [IST]
Other articles published on Jul 23, 2021
English summary
Poor People evicted from the streets in Tokyo for Historic Event
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X