‘ஒலிம்பிக்கில் அரசியலா?’ வேண்டுமென்றே மோசமான புகைப்படங்கள்.. பரபரப்பு குற்றச்சாட்டை கிளப்பிய சீனா!

ஜப்பான்: ஒலிம்பிக் தொடர்பான செய்திகளில் சர்வதேச ஊடகங்கள் சீனாவுக்கு எதிராக செயல்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 23ம் தேதி தொடங்கிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது முதல் சீன அணியினர் தான் பல்வேறு போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

ஒலிம்பிக் 2020.. ஸ்கீட் ஷூட்டிங்கிலும் பெருத்த ஏமாற்றம்.. இந்திய வீரர்கள் மை ராஜ் & அங்கத் தோல்வி! ஒலிம்பிக் 2020.. ஸ்கீட் ஷூட்டிங்கிலும் பெருத்த ஏமாற்றம்.. இந்திய வீரர்கள் மை ராஜ் & அங்கத் தோல்வி!

சீனாவின் ஆதிக்கம்

இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் அதிகபட்சமாக சீனா 18 பதக்கங்களை குவித்துள்ளது. இதில் 6 தங்கப்பதக்கமும், 5 வெள்ளிப்பதக்கங்களும், 7 வெங்கல பதக்கங்களும் ஆகும். இன்னும் சில போட்டிகளில் வெற்றிக்கு மிக அருகில் சென்று பதக்கங்களை தவறவிட்டுள்ளன. இதன் காரணமாக சீன வீரர்கள் பதக்க வேட்டையில் ஈடுபடும் செய்திகள் உலக நாடுகளின் செய்திகளில் தினமும் இடம்பெற்று வருகிறது.

சர்ச்சை

இந்நிலையில் சீன வீரர், வீராங்கனைகள் குறித்த செய்திகளை வெளியிடும்போது மட்டும் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ராய்டர்ஸ் ( Reuters) CNN போன்ற செய்தி நிறுவனங்கள் அரசியல் பின்நோக்கத்துடன் வேண்டுமென்றே சீன வீரர், வீராங்கனைகளின் புகைப்படங்களை மோசமான முறையில் பயன்படுத்துவதாக அந்நாட்டு தூதரகம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

அரசியல் உள்நோக்கம்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இலங்கையில் உள்ள சீன தூதரகம், ஒலிம்பிக்கில் சீன வீரர்களின் புகைப்படங்களிலேயே மிகவும் மோசமாக உள்ள புகைப்படங்களை மட்டும் வேண்டுமென்றே தேர்ந்தெடுத்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. விளையாட்டு போட்டிகளில் அரசியலை உள்நுழைக்காதீர்கள். சிறிதும் வெட்கமின்றி உங்களை எந்தவித சார்பும் இல்லாத நடுநிலை ஊடகம் என்றி கூறிக்கொள்கிறீர்கள். ஒலிம்பிக்கிற்கு மதிப்பு கொடுங்கள் என சாடியுள்ளது.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட மற்ற நாட்டு வீரர்களின் புகைப்படங்களையும், சீன வீரர்களின் புகைப்படங்களையும் ஒப்பீடு செய்து காட்டியுள்ள சீன தூதரகம் சர்வதேச ஊடகங்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளது. இதே போல CNN செய்தி நிறுவனம் ‘ஒலிம்பிக்கில் சீனாவுக்கு முதல் தங்கம், அதிக கொரோனா பாதிப்புகள்' என தலைப்பு வைத்திருந்ததையும் இணைத்துள்ளது. இந்த ட்வீட்டுக்கு கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
China slams Reuters, CNN over Olympics photos of Tokyo Olympics 2020
Story first published: Monday, July 26, 2021, 22:27 [IST]
Other articles published on Jul 26, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X