For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Tokyo Olympics 2021: ஒருவாரமே மீதமிருக்க.. ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா.. கலக்கத்தில் ஜப்பான்

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள கிராமத்தில் முதன் முதலாக ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ளது

கடந்தாண்டு கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இந்த போட்டிகள் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்த .தயாராகி வருகிறது

1.14 மணிநேர உரையாடல்..பல்வேறு வீரர்களின் வாழ்கை கதை..ஒலிம்பிக் வீரர்களுக்கு ஊக்கம் தந்த பிரதமர் மோடி1.14 மணிநேர உரையாடல்..பல்வேறு வீரர்களின் வாழ்கை கதை..ஒலிம்பிக் வீரர்களுக்கு ஊக்கம் தந்த பிரதமர் மோடி

 மிகுந்த பாதுகாப்பு

மிகுந்த பாதுகாப்பு

உலகை அச்சுறுத்தி வரும் புதுவகை டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸானது ஜப்பான் நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஜப்பானில் போட்டிகளை நடத்தக்கூடாது என அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். எனினும் மிகுந்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் போட்டிகளை நடத்தி முடிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டது. மேலும் பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கியிருந்தது.

 7 நாட்களுக்கு முன்னதாக

7 நாட்களுக்கு முன்னதாக

கொரோனா பாதுகாப்பு ஏற்பாடாக அயல்நாட்டு வீரர்கள் அனைவரும் டோக்கியோவிற்கு வருவதற்கு முன்பாக 2 பரிசோதனை மேற்கொண்டு அதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்திருக்க வேண்டும் என ஜப்பான் நாட்டு அரசு தெரிவித்தது. அதே போல டெல்டா ப்ளஸ் எனப்படும் புதுவகை கொரோனா பரவி வரும் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளின் வீரர்கள் டோக்கியோவிற்கு கிளம்புவதற்கு 7 நாட்களுக்கு முன்னதாக இருந்து தினந்தோறும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

 ஹஷிமோடோ மன்னிப்பு

ஹஷிமோடோ மன்னிப்பு

இதற்கிடையே, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக அவசர நிலை பிரகடனம் ஏற்படுத்தப்பட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ஜூலை 12ம் தேதி முதல் இது ஆகஸ்ட் 22 வரை அவசர நிலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் தான் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதனால், ஒலிம்பிக்போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதலில் சில போட்டிகளுக்கு மட்டும் குறைந்த அளவிலான ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முழுவதுமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்காக பார்வையாளர்களிடம் டோக்கியோ ஒலிம்பிக்கின் தலைவர் ஹஷிமோடோ மன்னிப்பு கோரியிருந்தார். அவர்களின் பணம் மீண்டும் திருப்பி கொடுக்கப்படும் எனவும் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

Recommended Video

Olympic 2021 தொடங்குவதில் சிக்கல்? Tokyoவில் Emergency! | OneIndia Tamil
 முதல் பாதிப்பு

முதல் பாதிப்பு

இந்த சூழலில், தற்போது டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடக்கவுள்ள கிராமத்தில் முதன் முதலாக ஒரு நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஒலிம்பிக் அமைப்பாளர்கள் இன்று (ஜுலை.17)தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சோதனையில், இது கிராமத்தில் முதல் பாதிப்பு என்று தெரியவருகிறது" என்று டோக்கியோ ஏற்பாட்டுக் குழுவின் செய்தித் தொடர்பாளர் மாசா தகாயா செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் ஒரு வாரமே இருக்கும் சூழலில், முதல் கொரோனா பாதிப்பு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Saturday, July 17, 2021, 14:14 [IST]
Other articles published on Jul 17, 2021
English summary
Tokyo olympics 2020 First case of Covid-19 - ஒலிம்பிக்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X