For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்முன்னே தாயின் மருத்துவ செலவு... பதக்கம் வெல்ல வேண்டிய கட்டாயம்.. லோவ்லினாவின் பின் இருந்த சோகம்!

ஜப்பான்: தாயின் மருத்துவ செலவிற்காக பதக்கம் வென்றே தீர வேண்டும் என்ற சூழலில் ஒலிம்ப்பிக்கில் சாதனை புரிந்துள்ளார் இந்திய வீராங்கனை லோவ்லினா.

பாக்சிங்கில் தொடர்ந்து இந்தியா இரண்டு தோல்விகளை சந்தித்த நிலையில் லோவ்லினா போர்கோஹைன் மட்டும் ஒரு பக்கம் அதிரடியாக ஆடி வருகிறார்.

குத்துச்சண்டையில் மகளிர் வெல்டர் (64-69 கிலோ) பிரிவு காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. 2-வது காலிறுதியில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் சீன தபேயின் நின்-சின்-சென்-ஐ எதிர்கொண்டார்.

ஆக்ரோஷம்

ஆக்ரோஷம்

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய லோவ்லினா தனது வேகமான பன்ச்களால் புள்ளிகளை குவித்தார். இதனால் முதல் சுற்று முடிவில் 48-47 என்று லோவ்லினா முன்னிலை வகித்தார். பின்னர் 2வது சுற்றில் 50-45 என்றும், 3வது சுற்றில் 49 - 46 என்ற புள்ளிக்கணக்கில் லோவ்லினா முன்னிலை பெற்றார்.

பதக்கம் உறுதி

பதக்கம் உறுதி

இதன் மூலம் சீன தைபே வீராங்கனை சின் தைனை 4:1 என்ற கணக்கில் வீழ்த்தி லோவ்லினா வெற்றி பெற்றார். அரையிறுதி போட்டிக்கு லோவ்லினா தகுதி பெற்றதால் ஒரு பதக்கம் உறுதியானது. அடுத்த போட்டியில் தோல்வி அடைந்தால் கூட இந்தியாவிற்கு குறைந்தது வெண்கல பதக்கமாவது கிடைக்கும். ஆனால் லோவ்லினா கண்டிப்பாக தங்கம் வெல்ல அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 தந்தையின் பெருமை

தந்தையின் பெருமை

இந்நிலையில் லோவ்லினா கடும் போராட்டத்திற்கு இடையே பதக்கம் வென்றிருப்பது தெரியவந்துள்ளாது. லவ்லினாவின் தாயார் மாமோனி போர்ஹோயினுக்கு கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவரை லோவ்லினாதான் கவனித்துக்கொண்டுள்ளார். ஆனால் அவரின் தாயாருக்கு மேல்சிகிச்சை செய்ய அதிக தொகைகள் செலவாகி வந்துள்ளன.

 மருத்துவ செலவு

மருத்துவ செலவு

இதுகுறித்து பேசிய லோவ்லினாவின் தந்தை, ஆண் குழந்தைகள் தான் பெற்றோரை சுமக்கிறார்கள் என பேசப்படுகிறது. ஆனால் நான் மூன்று மகள்களை பெற்றவன் என்பதில் பெருமை கொள்கிறேன். என் மனைவிக்கு மருத்துவ செலவுகள் உள்ளன. தற்போது லோவ்லினா பதக்கம் வென்றிருப்பதால் இரண்டாவது வாழ்க்கை கிடைத்துள்ளது. இது நாங்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக என் மனைவியை குணப்படுத்த உதவும் என நெகிழ்ச்சியுடன் லாவ்லினா அடுத்ததாக அரையிறுதியில் உலக சாம்பியன் புசானஸ் சுர்மெனெலி (Busenaz Surmeneli) என்பவரை எதிர்கொள்ளவுள்ளார்.

Story first published: Friday, July 30, 2021, 21:45 [IST]
Other articles published on Jul 30, 2021
English summary
Indian Boxer lovlina's father shared his words after she confirms olympic medal in Tokyo Olympics 2020
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X