For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீச்சல் போட்டி: 2வதாக வந்தும் பதக்கம் இல்லை.. இந்தியாவின் சாஜன் பிரகாஷ் மீண்டும் தோல்வி- காரணம் என்ன

ஜப்பான்: ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான நீச்சல் போட்டியில் 100மீ பிரிவு போட்டியிலும் இந்திய வீரர் சாஜன் பிரகாஷ் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிக்காக முதல் முறையாக தேர்வான இந்திய வீரர் சாஜன் பிரகாஷ் ஆவர்.

காவல்துறை அதிகாரியான இவர், தனது முதல் ஒலிம்பிக்கில் எப்படியும் ஒரு பதக்கத்தை தட்டிச்செல்வார் எனக்கூறப்பட்டது. அந்த நம்பிக்கை தற்போது உடைந்துள்ளது.

ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறை.. 1,500-meter நீச்சல் போட்டி.. தங்கம் வென்று சாதித்த முதல் பெண்ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறை.. 1,500-meter நீச்சல் போட்டி.. தங்கம் வென்று சாதித்த முதல் பெண்

போட்டி

போட்டி

டோக்கியோ ஒலிம்பிக்கில் சாஜன் பிரகாஷ் 100மீ மற்றும் 200மீ என 2 பிரிவு போட்டிகளில் கலந்துக்கொண்டுள்ளார். இதில் 200 மீட்டர் பட்டர்ஃப்ளை ஹீட் பிரிவு போட்டி கடந்த ஜூலை 26ம் தேதி நடைபெற்றது. இப்போட்டி தூரத்தை 4வது வீரராக கடந்தார்.எனினும் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. 5 குழுக்களாக நடைபெற்ற இப்போட்டியில் ஒட்டுமொத்த வீரர்களும் எவ்வளவு நேரத்தில் போட்டி தூரத்தை கடந்தனர் என்பதை கணக்கிட்டு முதல் 16 இடங்களை பிடிக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் சாஜன் பிரகாஷ் 24வது இடத்தை பிடித்து வெளியேறினார்.

100மீ போட்டி

100மீ போட்டி

இந்நிலையில் இன்று அவருக்கான 100மீட்டர் பட்டர்ஃப்ளை ஹீட் பிரிவு போட்டி நடைபெற்றது. மொத்தம் 8 குழுக்களாக நடைபெற்ற இந்த போட்டியில் 2வது குழுவில் சாஜன் இடம்பெற்றார். போட்டி தூரமான 100மீட்டரை அவர் 53.45 விநாடிகளில் கடந்து 2வது இடம் பிடித்தார். எனினும் அவரால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.

காரணம் என்ன

காரணம் என்ன

இந்த நீச்சல் போட்டி மொத்தம் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்றது. அனைத்து குழுவிலும் உள்ள வீரர்கள் எவ்வளவு நேரத்தில் போட்டி தூரத்தை கடந்தனர் என்பதை கணக்கிட்டுதான் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். அந்தவகையில் முதல் 16 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள். ஆனால் சாஜன் பிரகாஷ் ஒட்டுமொத்தமாக 46 வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் தோல்வி உறுதியாகியுள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

நீச்சல் போட்டியை பொறுத்தவரை இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மானா படேல், தோல்வியடைந்து நடையை கட்டினார். இதே போல ஆண்கள் பிரிவில் ஸ்ரீ ஹரி நடராஜனும் தோல்வியை தழுவி டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டனர். இந்த சூழலில் தற்போது கடைசி நம்பிக்கையாக இருந்த சாஜன் பிரகாஷும் வெளியேறிவிட்டார்.

Story first published: Thursday, July 29, 2021, 18:50 [IST]
Other articles published on Jul 29, 2021
English summary
Indian Swimmer Sajan Prakash finished 46th overall in the 100m butterfly heats and failed to qualify for the semi's on Tokyo Olympics 2020
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X