For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்ணுங்களா... வீட்டுக்குள்ளேயே இருந்து பயிற்சி செய்யுங்க... சாய் புதிய நடவடிக்கை

டெல்லி : கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள தடகள வீரர்களுக்கு பயிற்சி உபகரணங்களை வழங்க இந்திய விளையாட்டு ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் வரும் 3ம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.

அவனுக்காக இதை செய்! 6 சிக்ஸ் அடித்தபின்.. யுவராஜை சந்தித்த அந்த பவுலரின் தந்தை.. நெகிழ்ச்சி சம்பவம்!அவனுக்காக இதை செய்! 6 சிக்ஸ் அடித்தபின்.. யுவராஜை சந்தித்த அந்த பவுலரின் தந்தை.. நெகிழ்ச்சி சம்பவம்!

இந்நிலையில் அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து தங்களது பயிற்சிகளை மேற்கொள்ளும்வண்ணம் இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்ட செயலகம் இணைந்து வீரர்களுக்கு அவர்களுக்கு தேவையான பயிற்சி உபகரணங்களை வழங்கிவருகிறது.

வீட்டிற்குள் முடங்கிய தடகள வீரர்கள்

வீட்டிற்குள் முடங்கிய தடகள வீரர்கள்

சர்வதேச அளவில் பல விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டிகளும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். வீட்டிற்குள் தங்களது பிட்னெஸ் பயிற்சிகளை மட்டுமே அவர்களால் செய்ய முடிகிறது.

அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு

அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டோக்கியோவில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2020 அடுத்த ஆண்டு, அதே இடத்தில் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து சர்வதேச அளவில் தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வரும்நிலையில், சிலர், இந்த ஒத்திவைப்பு மூலம் தங்களுக்கு பயிற்சி செய்ய மேலும் கால அவகாசம் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்திய விளையாட்டு ஆணையம் நடவடிக்கை

இந்திய விளையாட்டு ஆணையம் நடவடிக்கை

இந்நிலையில், வீட்டில் முடங்கியுள்ள தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அவர்களுக்கு தேவையான பயிற்சி உபகரணங்களை வழங்க இந்திய விளையாட்டு ஆணையமான சாய் அமைப்பு முடிவு செய்து அவர்களிடம் விண்ணப்பங்களை பெற்று, உபகரணங்களை வழங்கி வருகிறது. இதனால் அவர்கள் தங்களது பயிற்சிகளை முழுமையாக இல்லாவிட்டாலும் ஒரளவிற்கு செய்ய முடியும்.

சாய் உறுதி

சாய் உறுதி

மத்திய விளையாட்டுத்துறை சார்பில் நாடு முழுவதும் பாரா ஒலிம்பிக் உள்ளிட்ட 107 தடகள வீரர்களுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், முதல்கட்டமாக 43 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதில் பாதி வீரர்களுக்கு உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சாய் தெரிவித்துள்ளது.

வீரர்கள் மகிழ்ச்சி

வீரர்கள் மகிழ்ச்சி

முதல்கட்டமாக பஜ்ரங் புனியா, சுனில்குமார் போன்ற குத்துச்சண்டை வீரர்களுக்கும், மனு பாக்கர், சவுரவ் சவுத்ரி, சஞ்சீவ் ராஜ்புத் ஆகிய துப்பாக்கிசுடுதல் வீரர்களுக்கும் பயிற்சி உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சாய் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தங்களுக்கு பயிற்சி உபகரணங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வீரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Story first published: Monday, April 27, 2020, 12:19 [IST]
Other articles published on Apr 27, 2020
English summary
A total of 107 Athletes were mapped for their requirements towards their Training at home -SAI says
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X