For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக செஸ் கம்போசிஷன் போட்டி.. இந்திய வீரர் தங்கம் வென்று அசத்தல்.. குவியும் பாராட்டு!

அமீரகம்: உலக செஸ் கம்போசிஷன் போட்டியில் இந்திய வீரர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

2022ம் ஆண்டுக்கான உலக செஸ் கம்போசிஷன் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஃபுஜெய்ராவில் நடைபெற்றது.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வீரர்கள் கலந்துக்கொண்ட இந்த தொடரில் இந்திய வீரர் வேல்முருகன் நல்லுசாமி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

செஸ் கம்போசிஷன் என்பது வழக்கமான செஸ் போட்டியை போன்றது கிடையாது. இதன் விதிமுறைகளும், ஆட்ட முறைகளும் முற்றிலும் மாறுபட்டிருக்கும். அதாவது இந்த போட்டியில் செஸ் பலகையில் ஏற்கனவே காய்களை பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருக்கும்., குறிப்பிட்ட காய் நகர்த்தலில் விளையாட்டை முடிக்க வேண்டும் என கூறப்படும். அதனை எவ்வளவு வேகமாக சரி செய்கிறார்கள் என்பது தான் போட்டி.

Velmurugan Nallusamy Clinches Gold medal in FIDE World Cup in chess composition

இதில் சிறப்பாக விளையாடிய வேல்முருகன் நல்லுசாமி முதலிடத்தை பிடித்து அசத்தினார். இவருக்கு தங்கப்பதக்கத்துடன் சேர்த்து இந்திய மதிப்பில் ரூ.40,000 பரிசுத்தொகையும் பரிசாக வழங்கப்படும். இரண்டாவது இடத்தை உக்ரைனை சேர்ந்த வலேரி என்பவரும், வெண்கலப்பதக்கத்தை சிங்கப்பூரை சேர்ந்த ஆண்ட்ரூவ் பச்னான் என்பவரும் கைப்பற்றினர்.

உலக செஸ் சமேளனத்தின் சார்பாக நடத்தப்படும் இந்த செஸ் தொடருக்கான பரிசுகள், விரைவில் வழங்கப்படவுள்ளன. FIDE-ன் தலைவர் அலெக்சே ஒகனேஸ்யான் கையொப்பமிட்ட சான்றிதழ்கள் தான் வெற்றி பெற்றவர்களுக்கு கொடுக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, October 11, 2022, 18:11 [IST]
Other articles published on Oct 11, 2022
English summary
Indian Chess player Velmurugan Nallusamy won Gold medal in FIDE World Cup in chess composition
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X