For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டேவிஸ் கோப்பையில் இந்திய வீரர்கள் அபார வெற்றி.. தோற்று ஓடிய பாகிஸ்தான் அணி!

நூர் சுல்தான் : கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நடைபெற்ற ஆசிய ஓசோனியா மண்டலம் 1 பிரிவுக்குட்பட்ட டேவிஸ் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 4க்கு 0 என்ற செட் கணக்கில் இந்தியா அபார வெற்றி கண்டுள்ளது.

நூர் சுல்தானில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி பாகிஸ்தானின் இளம் வீரர்கள் முகமது ஷோயிப் மற்றும் ஹுசைபா அப்துல் ரஹ்மான் இணையை 6க்கு 1 மற்றும் 6க்கு 3 என்ற செட் கணக்கில் 53 நிமிடங்களில் வெற்றி கொண்டது.

இதே போல ஒன்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் பாகிஸ்தானின் யூசப் காலில்லை 6க்கு 1 மற்றும் 6க்கு பூஜ்ஜியம் என்ற செட்கணக்கில் 32 நிமிடங்களில் வீழ்த்தினார். இதன்மூலம் இந்தியா உலக தகுதி சுற்று 2020க்கு முன்னேறியுள்ளது.

 இந்தியா அபார வெற்றி

இந்தியா அபார வெற்றி

கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா 4க்கு 0 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானை கலங்கடித்து ஓரம்கட்டி வெற்றி பெற்றுள்ளது.

 18 கிராண்ட்ஸ்லாம் வென்ற லியாண்டர் பயஸ்

18 கிராண்ட்ஸ்லாம் வென்ற லியாண்டர் பயஸ்

ஆசிய ஓசோனியா மண்டலம் 1 பிரிவுக்குட்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டேவிஸ் கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் 18 கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் லியாண்டர் பயஸ் போட்டியிட்டார்.

 மிரண்டு ஓடிய பாகிஸ்தான் வீரர்கள்

மிரண்டு ஓடிய பாகிஸ்தான் வீரர்கள்

லியாண்டர் பயஸ் மற்றும் ஜீவன் நெடுஞ்செழியன் இணை பாகிஸ்தானின் இளம் வீரர்கள் முகமது ஷோயிப் மற்றும் ஹுசைபா அப்துல் ரஹ்மான் ஜோடியை எதிர்கொண்டு ஆண்டு 6க்கு 1, 6க்கு 3 என்ற செட்கணக்கில் கதற அடித்து வெற்றி கொண்டது.

 32 வினாடிகளில் வெற்றி

32 வினாடிகளில் வெற்றி

இதேபோல ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் தன்னை எதிர்த்து களம் கண்ட பாகிஸ்தானின் யூசப் காலில்லை 6க்கு 1 மற்றும் 6க்கு பூஜ்ஜியம் என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி கொண்டார்.

 குரோஷியாவுடன் இந்தியா மோதல்

குரோஷியாவுடன் இந்தியா மோதல்

டேவிஸ் கோப்பையில் வெற்றி கண்டுள்ள இந்தியா வரும் மார்ச் மாதம் 6 - 7 தேதிகளில் குரோஷியாவுடன் உலக தகுதி சுற்றில் மோதுகிறது.

நிகோலாவின் சாதனை முறியடிப்பு

டேவிஸ் கோப்பை இரட்டையர் வரலாற்றில் 43வது வெற்றியை பெற்று லியாண்டர் பயஸ் சாதனை படைத்துள்ளார். 56 போட்டிகளில் விளையாடி இவர் தனது 43வது வெற்றியை பெற்றுள்ளார். இதன்மூலம் இத்தாலியின் நட்சத்திர வீரர் நிகோலா பீட்ரஞ்சலியின் 66 ஆட்டங்களுக்கு 42 போட்டிகள் வெற்றி என்ற சாதனையை இவர் வீழ்த்தியுள்ளார்.

Story first published: Sunday, December 1, 2019, 21:09 [IST]
Other articles published on Dec 1, 2019
English summary
India Beats Pakistan in Davis Cup and selects for world cup qualifying 2020
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X