மீடியாவுக்கு பேட்டி தர மறுப்பு.. 15,000 டாலர் அபராதம் - ஃபிரெஞ்சு ஓபன் தொடரில் வீசும் புது "புயல்"

ஃபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க மறுத்த நயோமி ஒசாகாவுக்கு 15,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கிராண்ட்ஸ்லாம்களில் ஒன்றான ஃபிரெஞ்சு ஓபன் (French Open 2021) டென்னிஸ் போட்டித் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றைப் பிரிவில் நடப்பு யுஎஸ் ஓபன் சாம்பியன் டோமினிக் தீமை, தரநிலையில் 68-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீரர் பாப்லோ எதிர்கொண்டார்.

இப்போதே.. ஆள் அனுப்பிய பிசிசிஐ.. கங்குலி பிளான் எப்போதும் 'பக்கா' - சம்பவம் ரெடி!

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டோமினிக் தீமை 4-6, 5-7, 6-3, 6-4, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் பாப்லோ.

பேட்டி அளிக்க மறுப்பு

பேட்டி அளிக்க மறுப்பு

அதேபோல், மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு ஆஸ்திரேலியன் ஓபன் சாம்பியனும், ஜப்பான் வீராங்கனையுமான நயோமி ஒசாகா - பாட்ரிகா மரியா டிக் மோதினர். இந்த ஆட்டத்தில் 6-4, 7-6 என்ற கணக்கில் வென்றார் ஒசாகா. அதேசமயம், முதல் சுற்றில் வென்றபோதிலும், ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க மறுத்ததால் அவருக்கு 15 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒத்துழைக்க மறுப்பு

ஒத்துழைக்க மறுப்பு

ஃபிரெஞ்சு ஓபன் போட்டி விதிப்படி, போட்டியில் விளையாடுபவர்கள் கண்டிப்பாக ஊடகங்களுக்குச் சேர்ந்து பேட்டி அளிக்க வேண்டும். ஆனால், முதல் சுற்றில் வென்றபின் ஊடகங்களைச் சந்திக்க மறுத்துவிட்டு ஒசாகா சென்றுவி்ட்டார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் குழு, ஒசாகாவின் நிலைப்பாட்டைப் பற்றி புரிந்துகொள்ள முயன்றது. ஆனால் உலகின் நம்பர். 2 வீராங்கனையான ஒசாகா அவர்களுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டார்.

அபராதம் செலுத்த தயார்

அபராதம் செலுத்த தயார்

நவோமி ஒசாகா ஃபிரெஞ்சு ஓபன் தொடர் தொடங்குவதற்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில், ' மனநல பிரச்சனைகளை சுட்டிக்காட்டி போட்டிகளுக்குப் பிறகான கட்டாய ஊடக நேர்காணல்களில் பங்கேற்க மாட்டேன் என்று கூறினார். மேலும், போட்டிக்கு பிந்தைய ஊடக நேர்காணலைத் தவிர்ப்பதற்காக அபராதம் செலுத்த தயாராக இருப்பதாகவும் ஒசாகா கூறியிருந்தார்.

தடை விதிக்க வாய்ப்பு

தடை விதிக்க வாய்ப்பு

அதன் பிறகும், ஃபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நிர்வாகம், ஒசாகா தனது முடிவை மாற்றிக் கொள்ளும் படி கோரிக்கை வைத்தும் அவர் கேட்கவில்லை. இந்த நிலையில், அவர் முதல் சுற்றுப் போட்டி முடிந்த பிறகு, ஊடக நேர்காணலில் கலந்து கொள்ளாமல் சென்றுவிட்டதால், ஒசாகாவுக்கு 15 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்த சுற்றுகளில் ஒசாகா இதுபோன்று செய்தால், அவருக்கு அடுத்துவரும் கிராண்ட்ஸ்லாம்களில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Read more about: naomi osaka
English summary
Osaka fined USD 15,000 media boycott French Open - ஒசாகா
Story first published: Monday, May 31, 2021, 13:38 [IST]
Other articles published on May 31, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X