For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரொம்ப சந்தோஷமா இருக்கு... அமெரிக்க ஓபன் தொடரில் பங்கேற்கும் நோவக் ஜோகோவிச்

நியூயார்க்: வரும் 31ம் தேதி நியூயார்க்கில் துவங்கவுள்ள அமெரிக்க ஓபன் 2020 தொடரில் தான் பங்கேற்கவுள்ளதாக 17 முறை கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளர் நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

Recommended Video

IPL 2020ல் இதை Miss செய்வீங்க

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இந்த நெருக்கடியான நேரத்தில் இந்த தொடரில் பங்கேற்பது சாதாரண விஷயமில்லை என்றும் ஆனால் உற்சாகமாக உணர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த தொடரை 4 முறை உலக சாம்பியன் ரபேல் நடால், மகளிர் டென்னிசில் முதலிடத்தில் உள்ள ஆஷ்லி பார்டி மற்றும் நிக் கிர்கியோஸ் ஆகியோர் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தோனியின் கொரோனா டெஸ்ட் நெகட்டிவ்.. விரைவில் சென்னை வருகிறார்.. ரசிகர்கள் குஷி!தோனியின் கொரோனா டெஸ்ட் நெகட்டிவ்.. விரைவில் சென்னை வருகிறார்.. ரசிகர்கள் குஷி!

31ம் தேதி துவக்கம்

31ம் தேதி துவக்கம்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகமாக உள்ள நிலையில், அங்கு தற்போது அமெரிக்க ஓபன் 2020 தொடர் வரும் 31ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து அதில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். மோசமான நேரத்தில் மோசமான முடிவு என்று அவர்கள் விமர்சித்துள்ளனர்.

ஜோகோவிச் பங்கேற்பதாக உறுதி

ஜோகோவிச் பங்கேற்பதாக உறுதி

4 முறை உலக சாம்பியன் ரபேல் நடால், மகளிர் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஆஷ்லி பார்டி மற்றும் நிக் கிர்கியோஸ் ஆகிய முன்னணி வீரர்கள் அமெரிக்க ஓபன் தொடரை புறக்கணித்துள்ளனர். இந்நிலையில் 17 முறை கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளர் நோவக் ஜோகோவிச் இந்த தொடரில் தான் பங்கேற்று விளையாடவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்.

எளிதான முடிவில்லை என ட்வீட்

எளிதான முடிவில்லை என ட்வீட்

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போதுள்ள நெருக்கடிகள் மற்றும் சவால்களுக்கிடையில் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுவது எளிதான முடிவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா பாதித்த ஜோகோவிச்

கொரோனா பாதித்த ஜோகோவிச்

கடந்த ஜூன் மாதத்தில் பால்கன்ஸ் பகுதியில் தொண்டு நிறுவனத்திற்காக டென்னிஸ் போட்டியை ஏற்பாடு செய்த ஜோகோவிச் மற்றும் சக வீரர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது முடிவுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதனிடையே, தற்போது தான் மிகவும் நலமாக உள்ளதாகவும் அதிகமாக பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் விளையாட பிட்டாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Friday, August 14, 2020, 14:05 [IST]
Other articles published on Aug 14, 2020
English summary
Novak Djokovic confirmed that he will play in the US Open
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X