செய்தியாளர்கள் கேள்வியால் கதறி அழுத வீனஸ் வில்லியம்ஸ்.. எதற்கு தெரியுமா?

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க லண்டன் வந்துள்ள நட்சத்திர வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், செய்தியாளர்களின் கேள்வியால் கதறி அழ ஆரம்பித்தார்.

லண்டன் நகரில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பிரபல டென்னிஸ் வீராங்கனை, வீனஸ் வில்லியம்ஸ் பங்கேற்றார்.

அப்போது அவரது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த வில்லியம்ஸ், தம் மீது எந்த தவறும் இல்லை என கூறினார். சிறிது நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு அழ ஆரம்பித்தார். பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

வீனஸ் வில்லியம்ஸ், கடந்த 9ம் தேதி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதிய விபத்தில், அந்த காரில் பயணம் செய்த ஒரு முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் வீனஸ் வில்லியம்ஸ் விதிமுறை மீறி காரை இயக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Venus Williams broke down in tears during a Wimbledon press conference on Monday when she was asked about her involvement in a fatal car crash in florida.
Story first published: Wednesday, July 5, 2017, 3:25 [IST]
Other articles published on Jul 5, 2017
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X