இந்திய ஓபன் பேட்மிண்டன்- உலக சாம்பியனை வீழ்த்திய 20 வயது இந்திய வீரர்.. 2 பட்டம் வென்ற இந்தியா..!!

டெல்லி: இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் சாதனை படைத்தனர். சிங்கப்பூரை சேர்ந்த நடப்பு உலக சாம்பியனான லோ கென் யூவிற்கு இந்தியாவின் லக்சயா சென் அதிர்ச்சி அளித்தார்

நாடு கடத்தப்படுகிறார் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்.. கடைசி முயற்சி தோல்வி.. ஆஸி.க்கு நுழைய 3 ஆண்டு தடை?நாடு கடத்தப்படுகிறார் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்.. கடைசி முயற்சி தோல்வி.. ஆஸி.க்கு நுழைய 3 ஆண்டு தடை?

இந்திய ஓபன் பேட்மிண்டன்

இந்திய ஓபன் பேட்மிண்டன்

டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் மைதானத்தில் இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றது.

ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் லோ கென் யூவை , லக்சயா சென் எதிர்கொண்டார்

பேட்மிண்டன் போட்டி

பேட்மிண்டன் போட்டி

போட்டி தொடங்கியதும் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் லக்சயா சென், தனது ஆக்கோரஷமான சர்வ்களால், லோ கென் வியூவை நிலை குலைய வைத்தார். எனினும் சுதாரித்து கொண்டு விளையாடிய உலக சாம்பியன், லோ கென் யூ, தக்க பதிலடி தந்து புள்ளிகளை பெற்றார்

ஆதிக்கம்

ஆதிக்கம்

இதனால் 22க்கு22 என்ற கணக்கில் புள்ளிகள் சமனில் இருக்க, லெச்யா சென் அதிரடியாக 2 புள்ளிகளை பெற்று இறுதியில் முதல் செட்டை 24க்கு22 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார். இதனால் 2வது செட்டை தனதாக்கி, சமன் செய்யலாம் என்று லோ கென் யூ எடுத்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. தொடர்ந்து 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய லெக்சயா சென் 2வது செட்டில் 21க்கு17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்

லெக்சயா சென்

லெக்சயா சென்

இதன் மூலம் 20 வயதான லெக்சயா சென் முதல் முறையாக இந்திய ஓபன் பட்டத்தை வென்று அசத்தினார். இதே போன்று ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தோனேஷிய ஜோடியான முகமது ஆசன், ஹேண்ட்ரா ஜோடியை 21க்கு16, 26க்கு24என்ற கணக்கில் இந்தியாவின் சிராக் ஷெட்டி, சாட்விக் சாய்ராஜ் ரெட்டி ஜோடி வென்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India open badminton 2022 World champion beaten by Indian rookie lakshya sen in finalsஇந்திய ஓபன் பேட்மிண்டன்- உலக சாம்பியனை வீழ்த்திய 20 வயது இந்திய வீரர்.. 2 பட்டம் வென்ற இந்தியா..!!
Story first published: Sunday, January 16, 2022, 22:08 [IST]
Other articles published on Jan 16, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X