3 முட்டை போட்ட கம்பீர்... 10 முட்டை போட்ட 'டென்'னை விட பெஸ்ட்தானே...!!

Posted By:

லண்டன்: என்னமோ கெளதம் கம்பீர் 3 போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட் ஆனதை வைத்து அவரை வாட்டி வதைத்து விட்டார்கள் பலரும். ஆனால் இங்கிலாந்திலோ சத்தமே இல்லாமல், ஒரு போட்டியில் ஒரு வீரரைத் தவிர மற்ற 10 பேருமே முட்டை எடுத்து மலை முழுங்கி மகாதேவ சாதனையைப் படைத்துள்ளதைப் பார்த்து நிச்சயம் கம்பீர் கண்டிப்பாக ஆறுதல் அடைவார் என்று நம்பலாம்.

இத்தனைக்கும் கம்பீர்தான் சரியாக ஆடவில்லையே தவிர அவரது அணி பரவாயில்லை, ரொம்ப மோசமாகவெல்லாம் ஆடாமல் சற்று கெளரவமாகத்தான் ஆடி வருகிறது.

ஆனால் செஷைர் லீக் டிவிஷன் 3வது போட்டியில் கலந்து கொண்ட டென் விர்ரல் கிரிக்கெட் கிளப் வீரர்கள் படா மோசம்.. பக்கா நாசமாக ஆடி 3 ரன்களை மட்டுமே எடுத்து 10 விக்கெட்களும் முட்டை போட்டு கேவலப்படுத்தியுள்ளனர் அந்த அணியை.

அடுத்தடுத்து 3 முட்டை

அடுத்தடுத்து 3 முட்டை

கம்பீர் நடப்பு ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து 3 முட்டைகளைப் போட்டு புதிய சாதனையைப் படைத்தார்.

முதல் மூன்றில் முட்டை

முதல் மூன்றில் முட்டை

முதல் மூன்று போட்டிகளிலும் அவர் போட்டது முட்டைதான். ஒரு ரன் கூட எடுக்கவில்லை.

சொல்லி அடித்த மீடியாக்கள்

சொல்லி அடித்த மீடியாக்கள்

இதையடுத்து மீடியாக்கள் கம்பீரைப் போட்டுத் தாக்கி வி்ட்டன. இதனால் கம்பீரமாக நடமாட முடியாத அளவுக்கு நெருக்குதலுக்குள்ளானார் கம்பீர்.

4வது போட்டியில் ஒன்று...

4வது போட்டியில் ஒன்று...

ஆனால் 4வது போட்டியில் சமாளித்து விட்டார் கம்பீர். அபாரமாக ஆடிய அவர் 5 பந்துகளைத் திறம்பட சந்தித்து ஒரு ரன்னை வெற்றிகரமாக எடுத்து சற்றே மனம் குளிர்ந்தார். ஆனால் அதற்கு மேல் எடுக்காமல் மறுபடியும் டென்ஷனக்குள்ளாக்கினார்.

ஆனால் டென்னுக்கு கம்பீர் பெஸ்ட்..

ஆனால் டென்னுக்கு கம்பீர் பெஸ்ட்..

ஆனால் டென் விர்ரல் அணியோ ரொம்ப பிரமாதம். விளையாடிய வீரர்கள் அத்தனை பேருமே டக் அவுட். ஹாப்சன் என்பவர் மட்டும் சமாளித்து ஆடி ஒரு ரன் எடுத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டார்.

ஓடியதை விட உதிரிகள் அதிகம்

ஓடியதை விட உதிரிகள் அதிகம்

இந்தப் போட்டியில் வீரர்கள் எடுத்த ரன் வெறும் ஒரு ரன்தான். ஆனால் எக்ஸ்ட்ராவாக வந்த ரன்கள் 2. ஆக வீரர்களை விட உதிரிகள்தான் அதிகம்.

இப்பச் சொல்லுங்க இந்த டென்னை விட நம்ம கம்பீர் பெஸ்ட்தானே.....

Story first published: Monday, April 28, 2014, 16:39 [IST]
Other articles published on Apr 28, 2014

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற