For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'ஹாட்ரிக்' வெற்றியுடன் தொடரை வெல்லுமா இந்தியா...?

நாட்டிங்காம்: அஸ்வின், அம்பட்டி ராயுடு, ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் உதவியால் 3வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா அழகான வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் 4வது போட்டியிலும் வென்று ஹாட்ரிக் வெற்றியை அது பதிவு செய்யுமா, மீதமுள்ள போட்டிகளிலும் இங்கிலாந்தை வீழ்த்தி வெள்ளையடிக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் ஒரு நாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2வது போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா சதமடித்தார்.

இந்த நிலையில் நேற்று நாட்டிங்காமில் நடந்த 3வது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று அசத்தியது. அஸ்வினினின் சுழலில் சிக்கி இங்கிலாந்து அணி தவிடு பொடியானது. பின்னர் அம்பட்டி ராயுடு சிறப்பாக பேட் செய்ய இந்தியாவின் வசமானது வெற்றி.

6 விக்கெட் வித்தியாசத்தில்

6 விக்கெட் வித்தியாசத்தில்

நாட்டிங்காம் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.

முதலில் ஆடி 227 ரன்கள் எடுத்த இங்கிலாந்து

முதலில் ஆடி 227 ரன்கள் எடுத்த இங்கிலாந்து

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து வெறும் 227 ரன்களையே எடுத்தது. இவர்களின் சரிவுக்கு அஸ்வின், ஜடேஜாதான் முக்கியக் காரணம்.

6 ஓவர்களில் 3 விக்கெட் காலி

6 ஓவர்களில் 3 விக்கெட் காலி

இங்கிலாந்து அணியின் சரிவை இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆரம்பித்து வைத்த பின்னர் அந்த அணி முடங்கிப் போனது. 6 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தனர் இந்திய வீரர்கள்.

அஸ்வின் அபாரம்

அஸ்வின் அபாரம்

ஆர். அஸ்வின் 39 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தார். இவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வானார். ஜோ பட்லர் மட்டுமே இவரை சமாளித்து அடித்து ஆடி 42 ரன்களைச் சேர்த்து அவுட்டனார். மற்ற இரு விக்கெட்கள் குக் மற்றும் ஹேல்ஸ் ஆவர்.

சிக்ஸே கிடையாது

சிக்ஸே கிடையாது

இங்கிலாந்து அணி முதல் 26 ஓவர்களில் ஒரே ஒரு பவுண்டரியை மட்டுமே அடித்திருந்தது. கடைசி வரை சிக்ஸரே அடிக்கவில்லை.

டோணிக்கு குஷி

டோணிக்கு குஷி

இந்திய ஸ்பின்னர்கள் அட்டகாசமாக பந்து வீசியது கேப்டன் டோணியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. போட்டிக்குப் பின்னர் அவர் பேசுகையில்,அஸ்வின், ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். ரெய்னாவும் முக்கியத்துவம் வாய்ந்த பந்து

வீச்சைக் கொடுத்தார் என்றார்.

அம்பட்டிக்குக் கிடைத்த விக்கெட்

அம்பட்டிக்குக் கிடைத்த விக்கெட்

நேற்றைய போட்டியில் அம்பட்டி ராயுடு பந்து வீசி ஒரு விக்கெட்டை வீ்ழ்த்தினார். இது அவருக்கு முதலாவது சர்வதேச விக்கெட்டாகும். கேப்டன் குக்கை அவர் காலி செய்தார்.

ரஹானே அழகு...!

ரஹானே அழகு...!

இந்தியத் தரப்பில் அஜிங்கியா ரஹானே சிறப்பாக ஆடி 45 ரன்களைக் குவித்தார்.

அடடே கோஹ்லி!

அடடே கோஹ்லி!

2வது போட்டியில் விராத் கோஹ்லி முட்டை போட்டிருந்தார். ஆனால் நேற்று சற்று சிறப்பாக ஆடி 40 ரன்களைச் சேர்த்தார்.

4வது போட்டி எட்பாஸ்டனில்

4வது போட்டி எட்பாஸ்டனில்

அடுத்து இரு அணிகளும் தங்களது 4வது போட்டியில் எட்பாஸ்டனில் சந்திக்கவுள்ளன. செவ்வாய்க்கிழமை இப்போட்டி நடைபெறவுள்ளது. இதிலும் இந்தியா வென்றால், ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரையும் வெல்ல முடியும்.

Story first published: Sunday, August 31, 2014, 14:36 [IST]
Other articles published on Aug 31, 2014
English summary
India's spinners again proved England's undoing as the tourists won the third one-day international at Trent Bridge on Saturday by six wickets to take a 2-0 lead in the five-match series. World champions India, chasing a modest 228 for victory, cruised to 228 for four with seven overs to spare. Ambati Rayudu, only playing because of Rohit Sharma's tour-ending finger injury, was an ODI-best 64 not out.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X