For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்லில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறது பஞ்சாப் அணி? பின்னணியில் போதை பொருள்… ரசிகர்கள் ஷாக்

மும்பை: போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான நெஸ் வாடியாவுக்கு ஜப்பானில் இரண்டாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஜப்பான் சென்றிருந்த நெஸ் வாடியா தனது பாக்கெட்டில் 25 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக ஜப்பான் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது தனது சொந்த பயன்பாட்டிற்காக கஞ்சா வைத்திருந்தாக வாடியா கூறியுள்ளார். ஜப்பானில் கஞ்சாவிற்குத் தடை உள்ளதால் வாடியாவுக்கு 2 ஆண்டுகள் தண்டனையை அங்குள்ள நீதிமன்றம் விதித்தது.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

பிரிட்டானியா பிஸ்கட், பாம்பே டையிங், கோ ஏர் நிறுவனங்களும் இவருக்குச் சொந்தமானவை தான். வாடியா குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 13.1 பில்லியன் யுஎஸ் டாலர்கள் ஆகும். நெஸ் வாடியாவின் சொத்து மதிப்பு 50,000 கோடி.

பஞ்சாப் அணிக்கு நெருக்கடி

பஞ்சாப் அணிக்கு நெருக்கடி

பெரும் செல்வந்தரான அவர், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ளதால் அவர் உரிமையாளராக உள்ள கிங்ஸ் 11 பஞ்சாப் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சஸ்பெண்ட்?

சஸ்பெண்ட்?

அந்த அணி ஐபிஎல் போட்டிகளிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.அணியின் உரிமையாளர் சூதாட்டத்தில் ஈடுபட குற்றத்திற்காக சென்னை அணி 2 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில்,வாடியா மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு தற்போது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

முடிவுகள் பாதகம்

முடிவுகள் பாதகம்

இதனிடையே இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ அதிகாரிகள் கூறியிருப்பதாவது: பிசிசிஐ இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்து கொள்ளாது. முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அந்த முடிவுகள் பஞ்சாப் அணிக்கு பாதகமாக தான் முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

Story first published: Friday, April 17, 2020, 20:58 [IST]
Other articles published on Apr 17, 2020
English summary
Action against Ness Wadia and Kings XI Punjab over drug offence issue says bcci official.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X