For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திட்டமிட்டபடி போட்டிகள் சென்னையில் நடக்கும்.. காவிரி எழுச்சியை உதாசீனப்படுத்தும் ராஜீவ் சுக்லா

சென்னையில் திட்டமிட்டபடி அனைத்து ஐபிஎல் போட்டிகளும் நடக்கும் என்று ஐ.பி.எல் தொடரின் சி.இ.ஓ ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

By Shyamsundar

சென்னை: சென்னையில் திட்டமிட்டபடி அனைத்து ஐபிஎல் போட்டிகளும் நடக்கும் என்று ஐ.பி.எல் தொடரின் சி.இ.ஓ ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். என்ன பிரச்சனை நடந்தாலும் போட்டி நடக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

கொல்கத்தா அணிக்கும் சென்னைக்கும் இடையில் இன்று போட்டி நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானம் செல்லும் வழியில் தற்போது காவிரி போராட்டம் நடக்கிறது. இதனால் போட்டிக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் திட்டமிடப்பட்டு இருக்கும் போட்டிகள் எல்லாம் கண்டிப்பாக நடக்கும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது போராட்டக்காரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தம் எத்தனை போட்டிகள்

மொத்தம் எத்தனை போட்டிகள்

சென்னை அணி மொத்தம் 14 லீக் போட்டிகளில் விளையாடும். இதில் 7 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும். மீதமுள்ள போட்டிகள் மற்ற மைதானங்களில் நடக்கும். இதில் சென்னை மைதானத்தில் முதல் போட்டி இன்று கொல்கத்தாவிற்கு எதிராக நடக்க உள்ளது.

நடக்காது என்று கூறினார்

நடக்காது என்று கூறினார்

இன்றைய போட்டி மிகுந்த பாதுகாப்பிற்கு பின்பே நடக்கிறது. வீரர்களுக்கு பெரிய அளவில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் ரசிகர்களுக்கும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இப்போதுவரை மைதானத்திற்கு ஒரு ரசிகர் கூட செல்ல முடியவில்லை.

என்ன ஆனாலும் நடக்கும்

என்ன ஆனாலும் நடக்கும்

சென்னையில் திட்டமிட்டபடி அனைத்து ஐபிஎல் போட்டிகளும் நடக்கும் என்று ஐ.பி.எல் தொடரின் சி.இ.ஓ ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். என்ன பிரச்சனை நடந்தாலும் போட்டி நடக்கும் என்று அவர் கூறியுள்ளார். 7 போட்டிகளும் எந்த பிரச்சனையும் இன்றி கண்டிப்பாக நடக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரிய அளவில் அவமதிப்பு

பெரிய அளவில் அவமதிப்பு

இவரது இந்த காவிரி போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். மக்களின் உணர்வுகளுக்கு இவர் மதிப்பளிக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் பேசி இருக்கிறார்கள். ஐபிஎல் போட்டி வேண்டாம் என்று கூறவில்லை சென்னையில் நடந்த வேண்டாம் என்றுதான் கூறினோம், அதை கூட செய்ய முடியாதா என்று அவருக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

Story first published: Tuesday, April 10, 2018, 19:13 [IST]
Other articles published on Apr 10, 2018
English summary
All 7 matches will held in Chennai as planned says, Rajeev Shukla. He says that, no match will be changed to anyother stadium due to the protest.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X