தோனி, ரெய்னா முதல் ஷர்துல் வரை..... சிஎஸ்கே வீரர்கள் படைக்கவிருக்கும் பெரும் சாதனைகள்... முழு விவரம்!

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டு படைக்கவிருக்கும் பல்வேறு சாதனைகள் தெரியவந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் 3 முறை இதுவரை கோப்பை வென்றுள்ள சிஎஸ்கே அணி கடந்த ஆண்டு ப்ளே ஆப்-க்கு கூட நுழையவில்லை. எனவே இந்த முறை நிச்சயம் கம்பேக் கொடுக்க வேண்டும் என சிஎஸ்கே அணி களமிறங்கவுள்ளது. அதற்காக வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சீசனில் சென்னை அணி தனது முதல் போட்டியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் சென்னை வீரர்களால் பல்வேறு புதிய மைல்கல்கள் எட்டப்படவுள்ளன. அவைகுறித்து பார்க்கலாம்..

ரெய்னாவின் சாதனை

ரெய்னாவின் சாதனை

டி20 போட்டிகளில் ரெய்னா இதுவரை 308 போட்டிகளில் 8494 ரன்களை குவித்துள்ளார். இன்னும் 506 ரன்களை எடுத்தால் டி20 போட்டிகளில் 9000 ரன்களை கடந்த 3வது இந்தியர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்னர் கோலி (9731), ரோகித் (9065) உள்ளனர்.

# ஐபிஎல் இதுவரை 189 இன்னிங்ஸ்களில் 5368 ரன்களை ரெய்னா எடுத்துள்ளார். அவர் இன்னும் 632 ரன்கள் எடுத்தால் 6000 ரன்களை கடப்பார்.

# ரெய்னா ஐபிஎல்-ல் இதுவரை 194 ரன்களை எடுத்துள்ளார். அவர் இன்னும் 6 சிக்ஸர்களை விளாசினால் 200 சிக்ஸர்களை தேவை.

# அதே போல ரெய்னா 493 பவுண்டரிகளை அடித்துள்ளார். எனவே 500 பவுண்டரிகளை தொட இன்னும் 7 பவுண்டர்கள் தேவை.

ஷர்துல்

ஷர்துல்

சிஎஸ்கே அணி பவுலர்கள் ஷர்துல் தாக்கூர் 46 விக்கெட்கள் மற்றும் தீபக் சாஹர் 45 விக்கெட்களை இதுவரை எடுத்துள்ளனர். எனவே இந்த சீசனில் 50வது விக்கெட்டை எடுக்க வாய்ப்புள்ளது.

தாஹீர்

தாஹீர்

ஐபிஎல் போட்டிகளில் இம்ரான் தாஹீர் இதுவரை 58 போட்டிகளில் 80 விக்கெட்களை எடுத்துள்ளார். அவர் அடுத்த 11 போட்டிகளில் 20 விக்கெட்களை எடுத்தால், ஐபிஎல்-ல் அதிவேகமாக 100 விக்கெட்களை எடுத்த வீரர் ஆவார். இதற்கு முன்னர் லசித் மலிங்கா 70 போட்டிகளில் 100 விக்கெட்களை எடுத்திருந்தார்.

 ராபின் உத்தப்பா

ராபின் உத்தப்பா

ஐபிஎல்-ல் சுரேஷ் ரெய்னா இதுவரை 193 போட்டிகளிலும், ராபின் உத்தப்பா 189 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். எனவே அவர்கள் இந்த சீசனில் தங்களது 200வது போட்டியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.எஸ்.தோனி

எம்.எஸ்.தோனி

# விக்கெட் கீப்பராக தோனி இதுவரை 148 விக்கெட்களை எடுத்துள்ளார். இந்த சீசனில் இன்னும் 2 விக்கெட்களை எடுத்தால், ஐபிஎல் வரலாற்றி 150 விக்கெட்களை எடுத்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைப்பார். இவருக்கு அடுத்தடுத்த இடங்களில் தினேஷ் கார்த்திக் (140), உத்தப்பா (90) உள்ளனர்.

# ஐபிஎல் தொடரில் ஒரு விக்கெட் கீப்பராக அதிக கேட்ச்களை பிடித்தவர்களில் பட்டியலில் 109 கேட்ச்களுடன் தோனி 2ம் இடத்தில் உள்ளார். முதலிடத்தில் தினேஷ் கார்த்திக் 110 கேட்ச்களுடன் முதலிடத்தில் உள்ளார். எனவே முதலிடத்தை கைப்பற்ற இருவருக்குள்ளும் கடும் போட்டி இந்த சீசனில் இருக்கும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
All stats of Chennai Super Kings that you need to know ahead of IPL 2021
Story first published: Thursday, April 8, 2021, 13:18 [IST]
Other articles published on Apr 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X